
இந்த வாழ்க்கை ஓய்கிறதாய் விளம்பும்
நாய்களின் ஊளையும் அடங்கிப்போகிறது..
மனிதர்களின் அவலக் கீச்சிடல்களும்
செத்துப் போய்க் கொண்டிருக்க
வாழ்வின் இறுதியை உறுதிப்படுத்த
இரவின் தனிமையில் தறப்பாள் கூட்டில்..
நாய்களின் ஊளையும் அடங்கிப்போகிறது..
மனிதர்களின் அவலக் கீச்சிடல்களும்
செத்துப் போய்க் கொண்டிருக்க
வாழ்வின் இறுதியை உறுதிப்படுத்த
இரவின் தனிமையில் தறப்பாள் கூட்டில்..

தூங்கவிடாது துரத்துகின்ற நினைவுகள்
குழந்தையொன்று வீறிட்டழுகின்றது
போர்வை விலகிப்போய் குளிர்
உறுத்துகிறதோ என நினைத்தேன்
தாய் உடல் சிதைந்து உயிர் பிரிந்ததை
அறியாது பாலுக்கு அழுத பாலகனை
நெஞ்சுருக பார்த்தேன்!
அதிகாலை பொழுது விடியும் கணம்
தூரத்தே கேட்கும் துவக்குச் சத்தங்கள்
விடியாத பொழுதை விடியவைத்தது
தறப்பாள் கொட்டகையை சரிபார்த்து
கஞ்சிக்கு கோப்பை அடுக்க வரிசையில்..
கண்பார்வை தூரத்தில் விழுந்து வெடித்த
செல் ஒன்று சிதறியோட வைத்தது.
குண்டுகள் வந்து விழுந்த அடுத்த
நாழிகை பொழுது நாங்களும் வீழ்ந்தோம்.
நிலை குலைந்தோம் எங்கள் நிலம் இழந்தோம்
எங்கள் உறவுகள் பலரை இழந்தோம்.
என்னில் நேசம் வளர்த்த நண்பர்கள்
சிலரும் அவற்றில் அடங்கும்.
கனவில்லை, காலிவூட் படமில்லை மெய்யே,
பல்நாட்டு கொடிகள் பறந்தது
காப்பாற்ற வருதென்று நினைக்க
தம்நிலை தாழ்ந்து தமிழினம் வளர்ந்திடும்
எண்ணம் தோண்றியதாலோ
கருக்கியளித்தன வல்லரசுகள்...
பதுங்கு குழிகள் பாடம் சொன்னது எங்களுக்கு,
மக்களே இன்னும் ஒரு நாள் கூட இங்கு இராதீர்கள்.
எங்கோ சென்று உயிர் பிழைத்து கொள்ளுங்கள்.
உங்கள் உறவுகளை இழந்தது போதும்,
உடல் உறுப்பிழந்து ஊனமானது போதும்.
இங்கு சுகமுடன் வாழ்ந்தது போதும்
நலமுடன் வாழ எங்காவது புறப்படுங்கள்,
வீற்றிருந்த இல்லம் காணோம்,
வாழ்ந்த ஊரே காணோம்,
தோட்டம் துரவுகள் காணோம்,
தென்னம் பிள்ளைகள் காணோம்,
மா வாழை காணோம்,
பனை மரங்கள் கருகின
நஞ்சு புதைந்த, இரத்தம் தோய்ந்த
முள்ளிவாய்க்கால் முற்றத்திலே
பத்தாண்டு கடந்தும் சற்றும் வலிதீராது
தனியாய் நிக்கிறது ஒரு மரம்....
ஆம் ஈரவிழிகளோடு உறவினை இழந்த
எத்தனை உயிர்கள் இன்று தனிமரமாய்....
- மயிலையூரான் -
குழந்தையொன்று வீறிட்டழுகின்றது
போர்வை விலகிப்போய் குளிர்
உறுத்துகிறதோ என நினைத்தேன்
தாய் உடல் சிதைந்து உயிர் பிரிந்ததை
அறியாது பாலுக்கு அழுத பாலகனை
நெஞ்சுருக பார்த்தேன்!
அதிகாலை பொழுது விடியும் கணம்
தூரத்தே கேட்கும் துவக்குச் சத்தங்கள்
விடியாத பொழுதை விடியவைத்தது
தறப்பாள் கொட்டகையை சரிபார்த்து
கஞ்சிக்கு கோப்பை அடுக்க வரிசையில்..
கண்பார்வை தூரத்தில் விழுந்து வெடித்த
செல் ஒன்று சிதறியோட வைத்தது.
குண்டுகள் வந்து விழுந்த அடுத்த
நாழிகை பொழுது நாங்களும் வீழ்ந்தோம்.
நிலை குலைந்தோம் எங்கள் நிலம் இழந்தோம்
எங்கள் உறவுகள் பலரை இழந்தோம்.
என்னில் நேசம் வளர்த்த நண்பர்கள்
சிலரும் அவற்றில் அடங்கும்.
கனவில்லை, காலிவூட் படமில்லை மெய்யே,
பல்நாட்டு கொடிகள் பறந்தது
காப்பாற்ற வருதென்று நினைக்க
தம்நிலை தாழ்ந்து தமிழினம் வளர்ந்திடும்
எண்ணம் தோண்றியதாலோ
கருக்கியளித்தன வல்லரசுகள்...
பதுங்கு குழிகள் பாடம் சொன்னது எங்களுக்கு,
மக்களே இன்னும் ஒரு நாள் கூட இங்கு இராதீர்கள்.
எங்கோ சென்று உயிர் பிழைத்து கொள்ளுங்கள்.
உங்கள் உறவுகளை இழந்தது போதும்,
உடல் உறுப்பிழந்து ஊனமானது போதும்.
இங்கு சுகமுடன் வாழ்ந்தது போதும்
நலமுடன் வாழ எங்காவது புறப்படுங்கள்,
வீற்றிருந்த இல்லம் காணோம்,
வாழ்ந்த ஊரே காணோம்,
தோட்டம் துரவுகள் காணோம்,
தென்னம் பிள்ளைகள் காணோம்,
மா வாழை காணோம்,
பனை மரங்கள் கருகின
நஞ்சு புதைந்த, இரத்தம் தோய்ந்த
முள்ளிவாய்க்கால் முற்றத்திலே
பத்தாண்டு கடந்தும் சற்றும் வலிதீராது
தனியாய் நிக்கிறது ஒரு மரம்....
ஆம் ஈரவிழிகளோடு உறவினை இழந்த
எத்தனை உயிர்கள் இன்று தனிமரமாய்....
- மயிலையூரான் -