
பயணங்கள் முடிவதில்லையே.. ஆறுகள் அப்படித்தான்!!
சலசலத்து ஓடிக் கொண்டிருக்கின்றது .. ஆறு..
சலசலத்து ஓடிக் கொண்டிருக்கின்றது .. ஆறு..
அதன் கரைகளில் இருந்து நீண்டிருக்கும்
பெருமரக் கிளைகளில் இருந்து விழுந்து கொண்டிருக்கின்றன..
பறவைகளின் எச்சங்களும்
உதிர்ந்த சருகுகளும் இலைகளும்
அவற்றினால்.. ஆற்றின் போக்கை
திசை திருப்ப முடிய வில்லை ..
ஆறு அமைதியாக அவற்றையும் .. தன்னோடு கூடவே
எடுத்துச் சென்று கொண்டே இருக்கிறபடியால்
எச்சங்கள் ..மிச்சங்கள்..சொச்சங்கள்
எதுவும் சந்தோஷப் படுவதற்கில்லை ..
ஆற்றின் போக்கை மாற்றி விட்டதாக!
ஆறுகள் அப்படித்தான் ..
அனைத்தையும் வாங்கி வைத்துக் கொண்டு
நாற்றமடிக்கத் தொடங்கும் குட்டைகள் அப்படியல்ல!!
ஆறுகள் ஓடிக்கொண்டேயிருக்கும்....!
- மயிலையூர் தனு -
பெருமரக் கிளைகளில் இருந்து விழுந்து கொண்டிருக்கின்றன..
பறவைகளின் எச்சங்களும்
உதிர்ந்த சருகுகளும் இலைகளும்
அவற்றினால்.. ஆற்றின் போக்கை
திசை திருப்ப முடிய வில்லை ..
ஆறு அமைதியாக அவற்றையும் .. தன்னோடு கூடவே
எடுத்துச் சென்று கொண்டே இருக்கிறபடியால்
எச்சங்கள் ..மிச்சங்கள்..சொச்சங்கள்
எதுவும் சந்தோஷப் படுவதற்கில்லை ..
ஆற்றின் போக்கை மாற்றி விட்டதாக!
ஆறுகள் அப்படித்தான் ..
அனைத்தையும் வாங்கி வைத்துக் கொண்டு
நாற்றமடிக்கத் தொடங்கும் குட்டைகள் அப்படியல்ல!!
ஆறுகள் ஓடிக்கொண்டேயிருக்கும்....!
- மயிலையூர் தனு -
இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.