அடிக்கல் நாட்டுவிழா - மயிலிட்டி முனையன் வளவு அருள்மிகு முருகையன் தேவஸ்தான மகா சபை மூன்று தள இராஜகோபுரம் மகாலட்சுமி கட்டிட அடிக்கல் நாட்டு விழாவானது எம்பெருமானின் இறையருளாலே எதிர்வரும் மங்களம் நிறைந்த நிகழும் வருடம் கார்த்திகை மாதம் 3ம் நாள் (19/11/2018) திங்கட்கிழமை நண்பகல் (12.00 மணி)
தெய்வேந்திர முகூர்த்தத்தில் கூடிய சுபவேளையில் விசேட பூசைகளுடன் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து பகல் 12.50 மணி முதல் 01.39 மணி வரையில் உள்ள சுப வேளையில் இக் கைங்கர்ய நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் அனைத்து அடியார்களும் ஆசாரசீலர்களாக வருகைதந்து இத் தெய்வீக கைங்கர்ய நிகழ்வில் கலந்துகொண்டு முருகப் பெருமானின் அருளாசிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி
இங்ஙனம்
ஆலய நிர்வாக சபை
நன்றி
இங்ஙனம்
ஆலய நிர்வாக சபை