முகவரியிருந்தும் முகவரியற்றவர்கள் ஆக்கப்பட்டு ஊர்விட்டு ஊர் ஓடியும்... நாடுவிட்டு நாடு கடந்தும்... கடந்த 28 ஆண்டுகளாக அனுபவித்த அகதி வாழ்வின் துயர வாழ்வின் நீட்சிக்கு முற்றுப்புள்ளியாய் கையில் கிடைத்தது இந்தக் கடிதம்.
ஆம், பிறந்து வளர்ந்த தாய் மண்ணின் குகன் வீதி மயிலிட்டி எனும் முகவரி சுமந்த கடிதம் இன்று என் கையில் அதே இடத்தில் கிடைக்கப் பெற்றுள்ளது.
37 அகவை நிறைவு பெறும் இவ்வேளையில் முதன் முறையாக எனது சொந்த முகவரி சுமந்த கடிதம் அதே முகவரியில் கிடைக்கப்பெற்றமை மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
37 அகவை நிறைவு பெறும் இவ்வேளையில் முதன் முறையாக எனது சொந்த முகவரி சுமந்த கடிதம் அதே முகவரியில் கிடைக்கப்பெற்றமை மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தனை ஆண்டுகளாய் வெற்று காகிதங்களில் சம்பிரதாயத்திற்காக இட்டு நிரப்பப்பட்ட #குகன்_வீதி_மயிலிட்டி எனும் நிரந்தர முகவரி இன்று கிடைக்கப்பெற்ற கடிதத்தின் மூலம் அர்த்தம் பெற்றுள்ளது.
எனது கடவுச்சீட்டு சுமந்து வந்த இந்தக் கடிதத்தை பத்தோடு பதினொன்றாக கடந்து சென்றுவிட முடியாது. இந்தப் புழகாங்கிதத்தின் அடிப்படையாக அமைந்த #அகதி வாழ்வின் வலிகளையும் வேதனைகளையும் ஏமாற்றங்களையும்நிராகரிப்புகளையும் துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்தவர்களால் நிச்சயமாக இதை உணரமுடியும்.

மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்பத் தடையில்லை... நாங்க மட்டும் இந்த உலகத்தில நாடு திரும்ப முடியவில்லை... என்ற உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஐய்யாவின் வரிகளுக்குள் இன்னும் வலிகளைச் சுமந்து கொண்டு ஏக்கத்துடனே வாழ்வின் கணப்பொழுதை நகர்த்திக் கொண்டிருக்கும் எனதருமை உறவுகளுக்கு இந்த பெருமகிழ்வை சமர்ப்பிக்கின்றேன்.
இரா,மயூதரன்
குகன் வீதி
மயிலிட்டி
13/07/2018
இரா,மயூதரன்
குகன் வீதி
மயிலிட்டி
13/07/2018