மயிலிட்டி, திருப்பூரின் நாயகனுக்கு கண்ணீர் வணக்கம்!
மயிலிட்டியில் குறித்த ஒரு பகுதியானது, காவற்கடவை என்ற புராதன பெயர் கொண்டு விளங்கியது. காலப்போக்கில் அது மருவி காட்டுக்கடவை என்றானது. அதுவே மயிலை மண்ணில் தலையெடுத்த குறிச்சி வேறுபாட்டின் பழிச்சொல்லாக மாறியது.
காட்டுக்கடவையார் என்று அழைக்கப்பட்ட பொழுதுகளில் எமது முன்னோர்களது உணர்வுகள் கொந்தளித்து, இரத்தம் சூடேறுமளவிற்கு அன்றைய நிலை காணப்பட்டது.
இந்நிலையில்தான் பாணாந்துறையில் வணிகத்தில் ஈடுபட்டுவந்த, இன்று (12/01/19) அமரராகியுள்ள ஆறுமுகம் பொன்னுச்சாமி அவர்கள் தமிழ்நாட்டின் இன்றளவிலும் துணி வர்த்தகத்தில் செழித்தோங்கி வரும் திருப்பூர் நகரத்தின் பெயரை காட்டுக்கடவை என்று அழைக்கப்பட்ட காவற்கடவைக்கு சூட்டுவதென முடிவு செய்தார்.
1950 களின் பிற்பகுதியில் பாணாந்துறையில் இருந்து, மயிலிட்டி காட்டுக்கடவை என்று அழைக்கப்பட்ட காவற்கடவை பகுதியில் வசித்துவந்த சின்னையா கணபதிப்பிள்ளை(SK) என்பவரின் பெயருக்கு திருப்பூர், மயிலிட்டி என்ற முகவரி குறித்து அஞ்சல் அட்டை அனுப்பியிருந்தார். அந்நேரம் கடமையில் இருந்த தபால் ஊழியர்களது ஒத்துழைப்புடன் காலப்போக்கில் திருப்பூர், மயிலிட்டி என்ற முகவரி குறித்த கடிதங்கள் எம்மவர்களை நாடி வரத்தொடங்கியது.
அன்றிலிருந்தே காட்டுக்கடவை என்ற பெயர் திருப்பூர் என்று மாற்றமடைந்தது.
காலப்போக்கில் இனவிருத்தி காரணமாக இடநெருக்கடி ஏற்பட்டபோது திருப்பூர் ஒழுங்கையில் பூர்வீகமாக குடியிருந்த எமது முன்னோர்கள் அயல் பகுதிகளில் உள்ள காணிகளை சொந்தமாக வாங்கி குடியேறத் தொடங்கினர்.
இவ்வாறு பரவிய குடிப்பரம்பலானது,
என மேற்கு திசை நோக்கியதாக சில கிலோ மீட்டர் நீளமான பகுதிகளை தன்னகத்தே உள்வாங்கி விரிவாக்கம் கண்டது.
இவற்றை உள்ளடக்கிய பகுதியே திருப்பூர் ஒன்றியம் என்றானது. இன்றைய மயிலிட்டி, திருப்பூர் ஒன்றியம் உருவான வரலாறு இதுதான். திருப்பூர் என்ற பெயரின் காரணகர்த்தா ஆறுமுகம் பொன்னுச்சாமி அவர்களே.
மயிலிட்டி, திருப்பூரின் நாயகனாக என்றென்றும் திகழும் அமரர் ஆறுமுகம் பொன்னுச்சாமி அவர்களுக்கு கண்ணீர் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார் மற்றும் மயிலிட்டி, திருப்பூர் ஒன்றிய உறவுகளின் துயரில் பங்கேற்பதுடன் அன்னாரின் ஆத்மா சிவபதமெய்ய எல்லாம் வல்ல ஆதிசிவனை வேண்டுகின்றேன்.
குறிப்பு : எமது மூத்தவர்களிடம் கேட்டறிந்த விடயங்களாக நினைவுத்தளத்தில் இருந்து தொகுத்த இவ்வரலாற்று
பதிவில் தவறுகள் இருந்தால் பொறுத்தருள்க.
இரா.மயூதரன்
குகன் வீதி,
திருப்பூர் ஒன்றியம்,
மயிலிட்டி.

- வேல் வீதி
- விநாயகர் வீதி
- அம்பாள் வீதி
- கொட்டுப்பள்ளம் வீதி / சிவன் வீதி
- குகன் வீதி
- ஈஸ்வரி வீதி
- தாழையடி வீதி
- தெனியம்மன் வீதி