எங்கள் முந்தையர் தடம்பதித்து சரித்திரம் படைத்த நெடுந்தீவு மண்ணில் வழித்தடம் தேடி ஒரு பயணம்....
வெல்லை
நெடுந்தீவு கரையோரத்தில் காணப்படும் மீன்பிடித்துறை ஒன்றின் பெயரே வெல்லை. இந்த வெல்லை பகுதியை மீன்பிடித்துறையாக உருவாக்கி கட்டியெழுப்பிய பெருமைக்குரியவர்கள் எங்கள் முந்தையரான மயிலிட்டி மைந்தர்களாவர்.

பருவகால மீன்பிடி தொழில் நோக்கில் நெடுந்தீவை மையப்படுத்திய கடல்தொழில் நடவடிக்கைக்கு ஏற்ற இடமாக கண்டறிந்த வெல்லை கடற்கரையை சுமார் ஐந்து தசாப்தங்களுக்கு முன்னரே மீன்பிடித்துறையாக உருவாக்கி கட்டியெழுப்பியதுடன் நின்றுவிடாது நெடுந்தீவு கடற்தொழிலாளர்களின் காவலரணாகவும் மயிலிட்டி மைந்தர்கள் திகழ்ந்துள்ளார்கள்.
நெடுந்தீவில் அன்றைய காலப்பகுதியில் சாதிய அடிப்படையில் நிலவிய அச்சுறுத்தலில் இருந்து கடற்தொழில் மேற்கொள்ளும் சமூகத்தவர்களை பாதுகாத்து வெல்லை பகுதியில் இருந்தும் சுதந்திரமாக தொழில் நடவடிக்கையை மேற்கொள்ளும் நிலையை மயிலிட்டி மைந்தர்களே ஏற்படுத்தியிருந்தார்கள்.

இதன் பின்னர் யுத்த சூழல் உள்ளிட்ட வேறுபல காரணங்களினால் வெல்லை பகுதியில் இருந்து மயிலிட்டி மைந்தர்கள் வெளியேறியிருந்தார்கள். இதன் பின்னர் நெடுந்தீவின் ஏனைய பகுதிகளில் இருந்து வந்து கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்திருந்தவர்கள் வெல்லை கடற்பகுதியில் காலடி வைக்கமுடியாத நிலை மீண்டும் உருவாகியிருந்தது.
இதுதவிர தெக்காட்டு அம்மன் ஆலயம், யூதா தேவாலயம் என்பவற்றையும் வழிபாட்டிற்காக நிறுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காலங்கள் கடந்த போதிலும் இன்று கூட நெடுந்தீவு வாசிகள் இவ்விடயங்களை நன்றியுடன் நினைவு கூர்வதை கேட்கும் போது உண்மையில் மயிலிட்டி மைந்தன் என்பதில் பெருமையாக உள்ளது.
எங்களை இப்பவும் மயிலிட்டி கூட்டம் என்றுதான் சிலபேர் சொல்வதுண்டு என்று நெடுந்தீவு வாசி ஒருவர் கூறுவதில் இருந்து நெடுந்தீவு கடற்தொழில் சார்ந்த சமூகத்துடன் எங்கள் முந்தையரான மயிலிட்டி மைந்தர்களின் உறவுப் பிணைப்பு வெளிப்படுகிறது.
எங்களையும் எங்கட இடத்தையும் மறக்காமல் பார்க்க வேணும் எண்டு தேடி வந்தது சந்தோசமா இருக்கு என்று ஒருவர் சொன்ன போது எங்கள் முந்தையரின் வழித்தடம் தேடிச்சென்ற பயணத்திற்கு அர்த்தம் கிடைத்தது.
எங்கள் முந்தையர் தடம்பதித்து சரித்திரம் படைத்த வழித்தடம் தேடும் பயணம் தொடரும்...
இரா.மயூதரன்.

40 அடி ஆதி மனிதனின் காலடி பதிந்த தடம்
இராவணேசுவரனின் காலடி தடம் என்றும்..
ஆதாம் காலடி என்றும்...
பிரதேச வாசிகள் கூறுகின்றனர்.
எது எப்படியோ சாதாரண தற்கால மனிதனின் காலடி அளவை விட ஐந்து மடங்கு பெரிதான காலடி தடமாக இது காணப்படுவதால் இதனடிப்படையில் சுமார் 40 அடி உயரமான மனிதன் ஆதிகாலத்தில் இப்பகுதியில் நடமாடியுள்ளது உறுதியாகிறது.
இடம்_நெடுந்தீவு