முடிவை மாற்றிவிடு.
மலர்களை நீ கூந்தலில் சூடுவதில்லை என்று அறிந்தபின்
மலர்கள் அனைத்தும் இறைவனை மன்றாடுகின்றதாம்
தங்களுக்கு மறுபிறப்பே வேண்டாம் என்று.
அரிதாரங்கள் நீ அணிவதில்லையென அறிந்ததும்
அவை அனைத்தும் ஆத்தங்கரை அருகில் அணிவகுத்து நிக்கின்றனவாம் வாழ்வை அழித்துக்கொள்ள எண்ணி.
பட்டாடைகள் மீது உனக்கு பற்றில்லையென பரவிய செய்தியால்
அனைத்து பட்டாடைகளும் பதறி பதறி பற்றி எரிகின்றதாம்.
பொன் நகைகளை நீ அணிவதில்லை என்று தெரிந்தபின்
அவை அனைத்தும் உன் வீட்டின் முன்னால் சாகும்வரை உண்ணாவிரதம் என அறிக்கை விட்டுள்ளனவாம்.
எளிமையிலும் நீ எழிலானவள் என்பதை நான் அறிவேனடி
இருப்பினும் பூலோக பெண்களின் சாபம் உனக்கெதற்கு முடிவை மாற்றிவிடு.
மயிலை ஐங்கரன்