மயிலிட்டி வீரமாணிக்கதேவன் துறையைச் சேர்ந்த லண்டன் ஈஸ்ற்காமில் (East Ham, London) வசித்து வரும் திரு.நாகேந்திரம் கருணாநிதிக்கும் அவரின் மனைவி சக்தியேஸ்வரி கருணாநிதிக்கும் லண்டன் சைவ முன்னேற்றச் சங்கத்தின் ஆதரவில் முதல் முறையாக ஆசியக் கண்டத்திற்கு வெளியில் தமிழ்நாடு திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனத்தினால், மதிப்பிற்குரிய ஆசான் "செந்நெறிச் செம்மல் "திருவாளர் சூ.யோ.பற்றிமாகரன் [S.J.Fatimaharan BA, Special Diploma (Oxford), BSC, PG Diploma, MA (Politics of democracy), MA (Tamil) ] அவர்களால் லண்டனில் 2012 ஆம் ஆண்டு ஒரு வருடமாக நடத்தப்பட்ட சைவசித்தாந்த நேர்முகப் பயிற்சிநெறியை நிறைவு செய்து,
அதற்கான வேலைத்திட்டத்தை (14 சைவசித்தாந்த சாத்திர நூல்களான திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞானபோதம், சிவஞானசித்தியார், இருபா இருபது, உண்மைவிளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப்ப∴றொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் ஆகியவற்றுடன் ஞானாமிர்தம் மற்றும் திருமந்திரம் உட்பட 12 திருமுறைகள்) பூர்த்தி செய்து, சைவசித்தாந்தத்தை விளங்கிக் கொண்டதை வெளிக்காட்டியதற்காக "சைவசித்தாந்த ரத்தினம்" சிறப்புப் பட்டம் 20-09-2014 அன்று லண்டன் செட்ஜ்ஹில் பள்ளியின் கேட்போர் கூடத்தில் (London SedgeHill School Auditorium) லண்டன் லூசியம் சிவன் கோயிலும், மலேசியா இந்து சங்கமும் சேர்ந்து நடாத்திய இரண்டாவது உலகத் திருமுறைப் பெருவிழாவில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 21 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்களால் வழங்கப்பட்டது.
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.