ஆனைக்கோட்டையில் இயங்கும் யா/ மயிலிட்டி றோ.க.த.க. பாடசாலையில் பயிற்றுவிக்கும் வசதிக்கட்டண ஆசிரியர்க்கான 2016ம் ஆண்டு நிதி அளித்தவர்களின் பெயர் விபரங்கள் நன்றியுடன்!
ஆனைக்கோட்டையில் இயங்கும் யா/ மயிலிட்டி றோ.க.த.க. பாடசாலையில் நடைபெற்ற "ஒளி விழாவும் பரிசளிப்பு விழாவும்" நிகழ்விற்கு, பாடசாலை நிர்வாகம் பிரதம விருந்தினர்களாக மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸின் இலங்கைக்கான கிளைப் பொறுப்பாளர்கள் திரு. குணபாலசிங்கம், திரு. அருணகிரிநாதன் ஆகியோரையும் அழைத்துக் கௌரவித்து, நிகழ்ச்சியை இனிதே நடாத்தியிருக்கின்றார்கள். மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் பாடசாலை நிர்வாகத்திற்கும், மற்றும் அனைவருக்கும் எமது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது! யா/ மயிலிட்டி றோ.க.த.க. பாடசாலையின் பழைய மாணாவி (ஊறணி) திருமதி ஜெயராணி நிர்மலதாசன் (இலண்டன்) அவர்களால் தற்போது ஆனைக்கோட்டையில் இயங்கும் யா/ மயிலிட்டி றோ.க.த.க. பாடசாலை மாணவர்களுக்கு கழுத்துப்பட்டிகள் மற்றும் கற்கை உபகரணங்களை ஏற்கனவே அன்பளிப்பாக வழங்கியிருந்தனர், அனைவரும் அறிந்ததே! அத்துடன் பாடசாலைக்கு Photo coppy இயந்திரம் வாங்குவதற்கும் உதவியிருக்கின்றார். தற்போது யாழ் சென்றிருந்தபோது பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களுடன் அவருக்கு நன்றி பாராட்டு விழா நடைபெற்றது. அவ்வேளை பெற்றோர்களை இழந்த கற்கையில் திறமையும் ஆர்வமும் கொண்ட மாணவன் ஒருவரது வருடத்திற்குரிய கற்கைச் செலவிற்காக குறிப்பிட்ட தொகையினை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த சேவை மனப்பான்மையை அனைவரது சார்பிலும் பாராட்டுகின்றோம். மேலதிக விபரங்கள் விரைவில்...... நிகழ்வின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி திரு. அ.குணபாலசிங்கம் யா/ மயிலிட்டி றோ.க.த.க. பாடசாலையின் பழைய மாணாவி (ஊறணி) திருமதி ஜெயராணி நிர்மலதாசன் (இலண்டன்) அவர்களால் தற்போது ஆனைக்கோட்டையில் இயங்கும் யா/ மயிலிட்டி றோ.க.த.க. பாடசாலை மாணவர்களுக்கு கழுத்துப்பட்டிகள் மற்றும் கற்கை உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கி உள்ளனர். மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் பொறுப்பாளர்கள் திரு. குணபாலசிங்கம், திரு. அருணகிரிநாதர் மூலமாக இந் நல்நிகழ்வு இனிதே நடைபெற்றது. திரு திருமதி நிர்மலதாசன் ஜெயராணி தம்பதியினரை மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் நன்றியுடன் பாராட்டுகின்றது! |
தமிழ் கலவன் பாடசாலையா/ மயிலிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை பதிவுகள்
May 2016
முழுப்பதிவுகள் |