நமது மயிலிட்டி
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

மற்றவர்களை புண் படுத்தாமல் நம் வாழ்க்கையை சந்தோசமாக நடாத்த 

23/3/2013

0 Comments

 
மற்றவர்களை புண் படுத்தாமல் நம் வாழ்க்கையை சந்தோசமாக நடாத்த 

(என்னால் முடிந்த சில அறிவுரைகள்....இந்த பகுதி எனது இணையத்தளத்தில் சில வருடங்களுக்கு முன்பு பதிவு செய்திருந்தேன் உங்களுக்காக மீண்டும்.....)

1. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வாய் விட்டு சிரியுங்கள்

2. குறைந்த பட்சம் எட்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.
3. நீங்கள் விரும்பும் புத்தகத்தை படிக்க பழகிக் கொள்ளுங்கள்.
4. செய்யக் கூடாது என்று நினைக்கும் செயலை முடிந்த வரை கொஞ்சமாவது செய்ய மனதை பழகிக் கொள்ளுங்கள்.
5. நீண்ட நாளைய பழகிய நண்பர்களை அடிக்கடி சந்தித்து பேசி உங்கள் பசுமையான பழைய நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
6. இது வரை நீங்கள் அறிந்திராத ஒரு நாட்டைப் பற்றிய புது விஷயங்களை பற்றி அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
7. ஒவ்வொரு நாளும் நடைப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
8. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஐந்து பழத்துண்டுகளையோ காய்கறிகளையோ விரும்பி உண்ண பழகுங்கள்.
9. நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்களை நீங்கள் விரும்புகின்றவர்களிடமோ அல்லது நெருக்கமானவர்களிடமோ மனதார பகிர்ந்து கொள்ளுங்கள்.
10. உங்களுக்கு பிடித்தஇ உங்களை கவர்ந்த கவிதைகளை அடிக்கடி நினைத்து பார்த்து பரவசமடையுங்கள்
11) அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்யுங்கள் – நீங்கள் மற்றவர்களுக்கு அளிப்பதே உங்களுக்குத் திரும்பி வருகிறது.
12) நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும் மனதாரப் பாராட்டுங்கள் – பாராட்டுக்களால் மகிழ்வுறுவது ஒரு இயற்கையான மனித சுபாவம்.
13) மன்னிப்பைக் கேட்குமுன்பே மன்னித்து விடுங்கள் – இரவு உறங்கு முன்பு தனக்கு எதேனும் தவறு இழைதவர்களை மனதார மன்னித்து விடுங்கள்.
14) எவரைப் பற்றியும் விரோத மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.
15) மனத்தை ஒரு குப்பையாக வைத்துக் கொள்ளாமல் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் – எதிர்மறையான எண்ணங்கள் பொறாமை பேராசை கோபம் ஆகியவை துன்பம் விளைவிக்கும்.
16) எது நடக்கிறது என்பதைவிட நடந்ததை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதே முக்கியம் – சில நடப்புக்களை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதுதான் வாழ்க்கையின் நிம்மதியை நிச்சயிக்கிறது.
17) நல்லது நடக்குமென்றே நம்புவோம் ஆனால் மோசமானவை நடந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்போம்.
18) குழந்தைகளிடம் தன்னுடைய பெற்றோர்கள் எப்போதும் தங்களிடம் அக்கறை காட்டவும் வழிகாட்டவும் இருக்கிறார்கள் என்ற முறையில் பழக வேண்டும்.
19) மனதையும் உடலையும் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக் கொள்ளவேண்டும்.
20) நாம் எப்போதுமே வெற்ற் பெற்றுக் கொண்டிருக்க முடியாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
21) நண்பர்கள் வாழ்கையில் முக்கியமானவர்கள்.
22) மனிதன் என்பவன் நல்லது கெட்டது கலந்த ஒரு கலவை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவம் உண்டு. இதைப் புரிந்து கொண்டு நாம் சாதனையை நோக்கி நடையிடவேண்டும்.
23) உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். ஆனால் உங்களுடைய குறைபாடுகளையும் புரிந்து கொள்ளுங்கள்.
24) மற்றவர்களிடம் நல்லதையே பாருங்கள் – குறைகளைப் பெரிது படுத்தாதீர்கள்.
25) அச்சம் தவிருங்கள்.
26) இறைவனின் அருளால் எல்லாமே சாத்தியம்தான்.
27) நாளை நடப்பதைப் பற்றிக் கவலையுறாமல் இறைவன் உடன் இருக்கிறான் என்பதை நம்புங்கள்.
28) ஹாஸ்ய உணர்ச்சியை வளர்த்துக் கொள்ளுங்கள். சிரித்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களோடு இணைந்து ஒண்றாகச் சிரித்து வாழ வேண்டும். ஆனால் மற்றவர்க¨ளைப் பார்த்து நகைக்கக்கூடாது.
29) வெற்றி என்பது பணத்தினாலோ பொருட்களினாலோ அளவிடப்படுவதில்லை. மகிழ்ச்சி என்பது நம் மனதின் நிலையைப் பொறுத்தே இருக்கிறது.
30) எந்த நிலையிலும் இறைவனை மனதார நினையுங்கள்
0 Comments



Leave a Reply.

    Photo

    முகவுரை

    எனதன்பு உள்ளங்களுக்கு பணிவான வணக்கம். வாழ்க நலமுடனும், வளமுடனும். என்னுடைய ஆக்கங்களுக்கு மயிலிட்டி இணையத்தில் பதிவுசெய்வதற்கு வழிவகுத்துத்தந்த மயிலிட்டி ஒன்றிய தலைவர் கௌசிகன் அவர்களுக்கம், சதானந்தன் அவர்களுக்கம், அங்கத்தவர்களுக்கும், திரு அருண்குமார் அவர்களுக்கும் எனது நன்றி மாலையை சமர்பிக்கிறேன். இதில் என்னுடைய ஆக்கங்கள் மட்டுமல்லாமல் நான் படித்து சுவைத்தவைகள், படித்ததில் பிடித்தவற்றையும் பதிவுசெய்கிறேன். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். என்றும் நன்றியுடன் உங்களில் ஒருவன் சௌந்தா..
    (Dr.jerman.myliddy)

    பதிவுகள்

    May 2016
    January 2016
    May 2015
    March 2015
    October 2014
    November 2013
    October 2013
    March 2013

    முழுப் பதிவுகள்

    All

    Picture
    Picture
    Picture
    Picture
    Picture
    Picture
    Picture
    Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-22 ourmyliddy.com