நமது மயிலிட்டி
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள் >
      • அன்ரன் றாஜ்
    • பொன்னையா மலரவன்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

பரிசுத்த ஆவியின் பெருவிழா - "சௌந்தா மனுவல்"

24/5/2015

0 Comments

 
Picture
பரிசுத்த ஆவியின் பெருவிழா 24 – 05 – 2015 
யோவான் 15 : 26-27 ---- 16 : 12-15

பரிசுத்த ஆவியின் பெருவிழா எனப்படுவது கிறிஸ்தவத்தின் பிறந்த நாள் - சாதாரன ஏழைகளாக படிப்பறிவு - வல்லமை - ஆற்றல் மற்றும் சமூக மதிப்பற்றவர்கள் இறைமகன் இயேசுவின் போதனையைப் பரப்பும் சக்தி மிக்க கருவிகளாக மாற்றப்பட்ட நாளெனக் கருதப்பட்டுக் கொண்டாடப்படவேண்டியதென வாய்கூசாமல் கூறலாம்.


பரிசுத்த ஆவியின் பெருவிழா பரலோக தகப்பனது மன்னிப்பையும் கருணைமிகு இரக்கப்பெருக்கத்தையும் எமக்கு ஞாபகப்படுத்துகின்ற விழாவெனப் பலரும் கருதுகின்றார்கள் என்பது எனது பணிவான அபிப்பிராயம்.

பரிசுத்த ஆவியானவர் யார் எனப்பல கருத்துக்கள் நிலவினாலும் பரிசுத்த ஆவியானவர் தெய்வீகத்தன்மை உடையவர் (திருத்தூதர் பணி 5:34) – சர்வ வியாபகர் (திருப்பாடல் 138:8) என வேதாகமம் தெரிவிக் கின்றது..

'உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? - உம்முடைய சமூகத்தை விட்டு எங்கே ஓடுவேன்? - நான் வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கே இருக்கிறீர் - நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர்' என்று புனித பவுலடிகள் (1கொரிந்தியர் 2:10-11) தெரிவிக்கின்றார்.

பரிசுத்த ஆவியானவர் சிந்தை - உணர்வுகள் - சித்தம் மற்றும் தெய்வீகத் தன்மையுடையவர் - சிந்திக்கிறவர் (1கொரிந்தியர் 2:10). பரிசுத்த ஆவியானவருக்கு நாம் துக்கம் (எபேசியர் 4:30) வருவிக்க முடியும் - நமக்காகப் பரிந்து பேசுகிறவராக (உரோமர் 8:26-27). பரம திரித்துவத்தில் மூன்றாமவராக - தேற்றரவாளனாகவும் - போதிக்கிறவராகவும் செயல் படுபவரெனவும் (யோவான் 14:16-26; 15:26) நாமறிகிறோம்.

இவ்வுலகத்தின் அனைத்து சக்திகளாலும் கைவிடப்பட்டு – இகழ்ச்சிக் குள்ளாகி - சமூகத்தாலே வெறுத்தொதுக்கப்பட்டு - பயந்து நடுங்கி மேலறையில் மறைந்து இருந்தவர்கள் பரிசுத்த ஆவியின் வல்லமை யால் புதுப்பிறப்பாக உருவாக்கப்பட்டார்கள் என நற்செய்தி தெளிவு படுத்துகின்றது.

பரிசுத்த ஆவியின் வல்லமையைத் திருச்சீடர்கள் பெற்ற பின்னர் அன்று இறைமகன் இயேசுவுக்கு ஏற்பட்ட படுகொலையைக் குறித்து பயந்து நடுங்கி தனித்துவிடப்பட்டதாக மனம் பேதலிக்கவில்லை – இறை மகனின் உத்தானத்தைக் குறித்து துணிவோடு சான்று பகன்றார்கள் - இறைமகனில் பழிசுமத்திய உலகினைக் கண்டித்தார்கள்.

கொலை செய்யப்படுவோம் என அஞ்சவில்லை - கிறிஸ்துவுக்காக மரணத்தையும் நல்மனதோடு ஏற்றுக்கொண்டார்கள் - கிறிஸ்தவர்கள் பிறப்பதில்லை மாறாக பரிசுத்த ஆவியின் வல்லமையால் உருவாக்கப் படுகின்றார்கள் என நிரூபித்தார்கள்.

எங்கள் ஒவ்வொருவரையும் தமது அன்புப்பிள்ளையாக எமது பரலோக தகப்பன் ஏற்றுக்கொள்கின்றார் - பிறர் எம்மை மிகச்சிறியோராகத் தகுதியற்றோராகக் கருதினாலும் எமது பரலோக தகப்பன் தமது பரிசுத்த ஆவியின் வல்லமையால் எம்மை நிறைவாக்குவார் என்பது உண்மை.

இறைமகன் பல்லாயிரம் தொகையினருக்குப் போதித்தார் - அதிகம்பேர் 'இவனைச் சிலுவையில் அறையும்' என்று கூக்குரலிட்டார்கள் - அன்னை மரியா மற்றும் திருச்சீடரோடு 'அழைக்கப்பட்ட ஒருசிலரான' நத்தானியேல் - நிக்கோதேம் - அரிமத்தியா சூசை - சிலுவை சுமந்த சீமோன் - மதகலா மரியா போன்றோர் 'மேலறையில்' செபத்தில் நிலைத்து இருந்திருக்கலாம்.

மனிதப் பெலவீனத்தால் ஏற்பட்ட பயத்தால் இறைமகன் இயேசுவை ஜெத்சமெனியில் இவர்கள் தனியேவிட்டு ஓடியிருப்பினும் தூய ஆவியின் வல்லமையால் தொடப்பட்டு புதுவாழ்விற்குள் உள்வாங்கப்பட்டு அழைப்பின் குரல்கேட்ட திருச்சீடராகின்றனர்.

கீழானவர்களாகக் கருதப்பட்ட திருச்சீடர்கள் ஒருமனப்பட்டு 'மேலறையில்' அன்னை மரியாவோடு கூடியிருந்ததால் இறை பார்வையில் 'மேலானவர்களாகக்' கருதப்பட்டார்கள்.

ஆண்டவரது தூய ஆவியார் திருச்சீடர்கள்மீது 'அக்கினி நாக்கு வடிவில்' இறங்கினாரென நற்செய்தி கூறுகின்றது - அன்று திருச்சீடர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலராக இருப்பினும் ஆவியானவரது வல்லமையால் இன்று கிறிஸ்தவம் பலகோடிக் கணக்கானவர்கள் மத்தியில் மாற்றத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது.

வலுவற்ற பாவிகளான எம்மையும் தமது ஆவியின் வல்லமையால் இறைமகன் இயேசு தொடவிரும்புகின்றார் - நாமனைவரும் கிறிஸ்துவுக்குள்ளே புதுப்படைப்புக்களாக மாறவேண்டுமென ஆசிக்கின்றார்.

அக்கினி நாக்கு வடிவில் இறங்கி வந்த உயிர் தரும் - உறுதியூட்டும் ஆவி நாம் ஒண்றுமில்லாத வெறும் களிமண்ணிலிந்து படைக்கப் பட்டபோதே (தொடக்க நூல்2:7) எமக்கு வழங்கப்பட்டு நாம் பெற்றுள்ள திருவருட்சாதனங்கள் வழியாக நமக்குள்ளே வாசம் பண்ணுகின்றார்.

நமது நம்பிக்கையின் ஊற்றாகி நமது தேவையில் உதவிடும் அன்புக் கரம் அவரே - நமக்குள்ளே நமக்காய் உருகி ஜெபித்திடுபவர் அவரே - நமக்கு எல்லாமே அவரே - இந்த மறைபொருள் உண்மையை நாம் ஏற்றுக்கொள்வோமா? அல்லது சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மாத்திரம் நம்பிக்கை வைத்தவர்களாக வாழுவோமா?

வல்லமையின் ஆவியாரே! நல்லவைகள் செய்பவரே! நான் புதுப்படைப்பாக மாற எனக்குக் கற்றுத்தாரும். - ஆமென்.
இந்தப் பக்கம் Hit Counter by Digits தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    Photo

    முகவுரை

    எனதன்பு உள்ளங்களுக்கு பணிவான வணக்கம். வாழ்க நலமுடனும், வளமுடனும். என்னுடைய ஆக்கங்களுக்கு மயிலிட்டி இணையத்தில் பதிவுசெய்வதற்கு வழிவகுத்துத்தந்த மயிலிட்டி ஒன்றிய தலைவர் கௌசிகன் அவர்களுக்கம், சதானந்தன் அவர்களுக்கம், அங்கத்தவர்களுக்கும், திரு அருண்குமார் அவர்களுக்கும் எனது நன்றி மாலையை சமர்பிக்கிறேன். இதில் என்னுடைய ஆக்கங்கள் மட்டுமல்லாமல் நான் படித்து சுவைத்தவைகள், படித்ததில் பிடித்தவற்றையும் பதிவுசெய்கிறேன். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். என்றும் நன்றியுடன் உங்களில் ஒருவன் சௌந்தா..
    (Dr.jerman.myliddy)

    பதிவுகள்

    May 2016
    January 2016
    May 2015
    March 2015
    October 2014
    November 2013
    October 2013
    March 2013

    முழுப் பதிவுகள்

    All

    Picture
    Picture
    Picture
    Picture
    Picture
    Picture
    Picture
    Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-23 ourmyliddy.com