பொருளாதார நெருக்கடியால் தாயகத்தில் அவதியுறும் உறவுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு லண்டனில் வாழும் கருணை உள்ளங்களான சிங்கவாகனம் இராஜசுந்தரம் அவர்களும், அவரோடு இணைந்து நிற்கும் தமிழ் உறவுகளும் தம் வியர்வைத் துளிகளால் பெறும் நிதியில் ஒரு பகுதியை ஒன்று திரட்டிதொடர்ந்து உதவி செய்து வருகின்றனர்.
இவர்களின் உதவிகள் மூலம் கடந்த காலங்களில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பயன் அடைந்துள்ளனர்.

அந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஆனந்தநகர், உதயநகர், தொண்டமான்நகர், ஸ்கந்தபுரம், ஆனந்தபுரம், கண்ணகிபுரம், வட்டக்கச்சி, ஜெயந்திநகர், பன்னங்கண்டி, பிரமந்தனாறு, புன்னைநீராவி, முழங்காவில், இரத்தினபுரம், விநாயகபுரம், உருத்திரபுரம், திருவையாறு, பரந்தன், பளை, ஆகிய இடங்களிலும், யாழ்ப்பாணம் கரவெட்டி, வரணி, வவுனியா குறிசுட்டகுளம் போன்ற இடங்களிலும் தெரிவு செய்யப்பட்ட 30 பேருக்கு ஏழரை இலட்சம் ரூபாய் வரையான பெறுமதியுடைய தையல் இயந்திரங்களை வழக்கியுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி, மற்றும் போர்ப்பாதிப்பு, மாற்றுவலு போன்ற பல்வேறு வகையில் வாழ்வாதாரம் தேவைப்பட்ட பயனாளிகளுக்கே இவ்வுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

லண்டனில் வசிக்கும் சிங்கவாகனம் இராஜசுந்தரம் அவரோடு இணைந்து, ஆஷா இராஜசுந்தரம், அனுஷா இராஜசுந்தரம், இனிதா லோகேந்திரன், ஜோதிகா லோகேந்திரன், மதியாபரணம் மதிராஜ், மனோரஞ்சிதம் சர்வானந்தா, இராஜதுரை மதியழகன், சர்மிளா இளமுருகன், சண்முகானந்தம் மணிமாறன், சுந்தரலிங்கம் நாகராசா, குணபாலசிங்கம் செல்வக்குமரன், இராமசாமி கருணாநிதி, வை.மு.சுப்பிரமணியம் குடும்பம், குமாரசாமி சயந்தன்,
பாலசிங்கம் இதயம், செல்வமயில் மோகன், தவராசா லவன், தவராசா றதன், பாலசிங்கம் ரசி, ஜெயபாலசிங்கம் ஜெயந்தன், சுப்பிரமணியம் குவேந்திரன், வெள்ளிமயில் ஜெகன், தம்பிராசா தவக்குமாரன், விஜிதா நித்தியபாலன் ஆகியோரும் வழங்கியுள்ளனர்.

இந்த தையல் இயந்திரங்களைக் கையளிக்கும் நிகழ்வு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் கரைச்சிப் பிரதேசசபை உறுப்பினர் சுவிஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் லண்டன் வாழ் சிங்கவாகனம் இராஜசுந்தரம் மற்றும் தமிழ் உறவுகள் சார்பாக ரவீந்திரன் குடும்பம், வெள்ளிமயில், செல்லக்கதிர்காமர், கமலா, சுதாஜினி ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், மாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, சிவயோகன், பிரதேசசபை தவிசாளர் குகராசா உறுப்பினர்களான பாலாபசேக இராஜசிங்க சேதுபதி, அன்ரன் டானியல், கரைச்சி, பளை பிரதேச சபை உறுப்பினர் வீரவாகுதேவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் பிரபாமணி, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கரைச்சி பிரதேச அமைப்பாளருமான பொன்.காந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் கருத்துரை வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,
புலம்பெயர் வாழ்வு என்பது சில வேளைகளில் இங்கிருந்து பார்க்கும் போது அக்கரை பச்சை போல தென்பட்டாலும் அங்கு போய் பார்த்தால் தான் அவர்கள் தம் வாழ்வை நிலைநிறுத்தி இரவு பகலாகப் படும்பாடு தெரியம்.
ஒரு புறத்தில் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட தாயக உறவுகளுக்காக தம் உழைப்பில் ஒரு பகுதியை தரும் அதேவேளை அரசியல் ரீதியாக எமது இனத்தின் விடிவுக்காக இராஜதந்திர ரீதியில் அந்தந்த நாட்டு சட்டதிட்டத்திற்கு இணங்க மிகுந்த சுமையைத் தோள்களில் சுமக்கிறார்கள். இது சாதாரண விடயம் அல்ல.
மாறுபட்ட கலாசாரம் உள்ள நாடுகளில் ஒரு வாழ்வைக் கட்டி எழுப்பி எம்மையும் தாங்கும் படியாக புலம்பெயர் தமிழர்கள் மாறி நிற்கிறார்கள்.

அந்த வகையில் தான் லண்டன் வாழ் சிங்கவாகனம் இராஜசுந்தரமும் அவரோடு, இணைந்து பலம் சேர்க்கும் உறவுகளையும் பார்க்க வேண்டும். அவர்களுக்கு நாம் மிகுந்த நன்றியுடையவர்களாக இருக்கிறோம்.
பொருளாதாரத்தை மேம்படுத்த இது போன்ற பெறுமதி வாய்ந்த உதவிகளைப் பெற்றுக் கொள்கிறவர்கள் மிகுந்த சிரத்தையுடன் அதனை வைத்து இரட்டிப்பாக்கும் எத்தனத்தில் ஈடுபடவேண்டும்.
உதவிகளை ஒரு மூலதனமாக்கி அதில் இருந்து வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பி வறுமைக்கு எதிராக வாழ்வை நகர்த்தி நிமிர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
நன்றி: தமிழ்வின்.கொம்