கிளிநொச்சியில் 30 பேருக்குத் தையல் இயந்திரம் வழங்கிய நிகழ்வை அடுத்து, பருத்தித்துறையில் பொருளாதார நெருக்கடியால் வறுமையில் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த 2 பேருக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு மேலும் 2 தையல் இயந்திரங்களை வழங்கியிருக்கின்றார்கள்.
"நாங்கள் தையல் படித்திருக்கின்றோம் ஆனால் நாம் இப்போது இருக்கும் நிலையில் தையல் இயந்திரம் என்பதை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. தெரிந்த தொழிலை கூலிக்காகத்தான் அழைக்கும் நேரங்களில் சென்று செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தோம், தற்போது கிடைத்த இந்த உதவியினால் எமது வருங்கால வாழ்வுமீது ஒரு நம்பிக்கையும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் ஏற்பட்டுள்ளது" என கிளிநொச்சி உதவி வழங்கலின் பின்னர் உதவி பெற்றவர்கள் மேற்கண்டவாறு கூறியிருந்தார்கள்.
நன்றி:திரு. சிங்கவாகனம்

வணக்கம் உறவுகளே!
நமது பலகுடும்பங்கள் நம்நாட்டில் தொழில்கள் பல தெரிந்திருந்தும் வறுமையின் பிடியில் சிக்கி உதவிகள் ஏதுமின்றி வாழ்க்கையை இழந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்,சிறிய உதவியோ அல்லது பெரிய உதவியோ, நான் செய்வதா?, நீ செய்கிறாயா?, அவர் செய்வாரா? என்றெல்லாம் எண்ணவேண்டாம் உங்களால் வழங்கப்படும் பங்களிப்பினால் ஒரு குடும்பம் நம்பிக்கையுடன் வாழ்க்கையை வாழத்தொடங்கும் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். இம்முறை நாம் பலர் சேர்ந்து செய்த பங்களிப்பினால் 32 குடும்பங்கள் பலனடைந்துள்ளனர். இதேபோல் நீங்களும் ஒரு குடும்பத்துக்கென்றாலும் உதவி செய்ய நினைத்தால் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள் உரியவர்களுடன் இணைத்து உங்கள் உதவியை விரைவில் கிடைக்கப்பெறச் செய்வோம். நன்றி!
அன்புடன்
இராசசுந்தரம் சிங்கவாகனம் (
தொடர்புகளுக்கு: 00 33 (0) 6 80 66 66 42