தாயகம் மயிலிட்டியை சொந்த இடமாகவும் தற்பொழுது புலம்பெயர்ந்து லண்டனின் வசித்துவரும் சிங்கவாகனம் இராஜசுந்தரம் என்ற கருணையுள்ளம், கிளிநொச்சி மாணவர்களின் கல்வி வளர்ச்சியை நோக்காக கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக இன்று 30 துவிச்சக்கர வண்டிகளை வழங்கியுள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி பணிமனையான அறிவகத்துக்கு வருகை தந்த சிங்கவாகனம் இராஜசுந்தரம், அவரது மனைவி, மகள் மற்றும் உறவினர்கள் ஆகியோர்,

தமிழரசு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும் மாவட்ட அமைப்பாளருமான வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் முன்னிலையில் இந்த துவிச்சக்கர வண்டிகளை மாணவர்களிடம் கையளித்தனர்.
இந்த நிகழ்வில் ஆசிரியர் சத்தியானந்தம், கட்சியின் கிளிநொச்சி மாவட்ட உப தலைவர் பொன்.காந்தன், கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,
புலம்பெயர் மண்ணில் இருந்து கொண்டு எமக்கு நம்பிக்கை தருகின்றவர்களில் சிங்கவாகனம் இராஜசுந்தரம் குடும்பத்தினர்களும் முக்கியமானவர்கள்.
கடந்த காலங்களிலும் எமது மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து உதவி வந்திருக்கின்றனர்.
தேர்தலின் பின்னான எமது பயணத்தில், எமது மக்களின் அபிவிருத்திகள் நோக்கிய எமது பணியில் முதன்முதலாக இவர்கள் கைகொடுக்கும் விதமாக மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் தந்த அமோக வெற்றி மக்களின் உரிமை மற்றும் அபிவிருத்தி ஆகிய இரண்டு விதமான நோக்கங்களுக்காக நாம் பயன்படுத்த உள்ளோம்.
எமது மக்களை பொருளாதார ரீதியிலும் தூக்கிவிடுகின்ற பணியையும் எமது கட்சி இனி பிரதானமாக திட்டங்கள் வகுத்து செயற்படும்.
அதே வேளை எமது மக்களுக்கான நிரந்தரமான சுபீட்சமான உரிமையுடன் கூடிய வாழ்வை பெற்றுக்கொடுக்க நாம் தொடர்ந்தும் நாம் பாடுபடுவோம்.
தாயகத்தில் வாழும் மக்களும் புலம்பெயர்ந்து வாழும் எங்கள் சொந்தங்களும் ஓரணியில் செய்கின்ற பயணத்தின் வெற்றியாக எமது எதிர்காலம் அமையும் என தெரிவித்தார்.

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.