நமது மயிலிட்டி
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள் >
      • அன்ரன் றாஜ்
    • பொன்னையா மலரவன்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

திருமதி. நிவேதிகா பாஸ்கரன் அவர்களினால் ஆலய நிலைப்பாடு பற்றிய கருத்துப் பதிவுகள்.

11/5/2019

0 Comments

 
Picture
​இணையப் பொறுப்பாளர் அவர்களுக்கு அன்பு வணக்கம்,

எனது கருத்துப் பதிவுக்கு தங்களிடமிருந்து பதில் கிடைத்துள்ளது மகிழ்ச்சி.. நன்றி.

எம்மால் உருவாக்கப்பட்ட நிர்வாகசபையில் பல குழப்பங்கள் ஏற்பட்டதும் நிர்வாகத்தினருக்கும் ஆதீனகர்த்தாக்களுக்குமிடையே பல கருத்து முரண்பாடுகள் தோன்றியதும் அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

கடந்த வருடம் ஆனி மாதத்திலிருந்தே நிர்வாகத்தினர் ஆதீனகர்த்தாக்களின் செயற்பாடுகளில் இடையீடு செய்துவரத் தொடங்கியதன் காரணமாக எமது தனிப்பட்ட செலவில் செய்யப்பட்ட புனருத்தாரண வேலைகளை குழப்ப முயற்சி செய்தது மட்டுமன்றி தரிசன மண்டபவேலைகளை செய்யவிடாது முற்றுமுழுதாக  தடைசெய்ய முயன்றதன் பயனாக நாம் பொலிசில் முறைப்பாடு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம். அதன் விவைளவாக இணக்கசபைக்கு எமது விடயம் கொண்டுசெல்லப்பட்டது. 

அங்கே ஆதீனகர்த்தாக்களுக்கு சார்பாக தீர்ப்பளித்து எம்மால் அதனை தொடர்ந்து கட்டமுடியும் என அனுமதி வழங்கப்பட்டது. அதன் பின்னரே எம்மால் ஆலயப்புனருத்தாரண வேலைகளை செய்யக்கூடியதாக இருந்தது. அதாவது 2018. 11ம்  மாதமே எம்மால் சுயாதீனமாக இயங்கமுடிந்தது.  அதுமாத்திரமின்றி நிர்வாக சபையில் ஆதீனகர்த்தாக்கள் மற்றும் அவர்களது நிலைப்பாடுகள் சிலவற்றை நான் தெரிவித்த காரணத்தினால் நிர்வாகத்திற்கு எதிராக செயற்படுவதாக தெரிவித்து நிர்வாகசபையிலிருந்து அகற்றப்படுவதாக  தெரிவித்தும் போஷகராக இருந்த வ.குமாரசாமி ஐயா அவர்களையும் போஷகர் பதவியிலிருந்து அகற்றுவதாகவும் தெரிவித்து  கடிதம் ஒன்று எனக்கும் எமது மூத்தசகோதரியின் கணவரான வ.குமாரசாமி ஐயா அவர்களுக்கு வழங்கப்பட்டது. 

ஆகவே நிர்வாக சபையில் எனது உறுப்புரிமை பற்றிய தெளிவு இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

அதுமாத்திரமின்றி நிர்வாக சபையின் செயற்பாடுகள் (வெளிநிர்வாகம்) தொடர்பான செயற்பாடுகள் எதுவும் எமது. கவனத்திற்கு கொண்டு வரப்படுவதில்லை. அவர்கள் எமது அறிவுரைகளையோ ஆலோசனைகளையோ கருத்திற்கொள்வதுமில்லை. ஆதீனகர்த்தாக்கள் என்ற முறையில் எம்முடன் கலந்தாலோசனையும் செய்வதில்லை. மாறாக நிர்வாகமே கோவில் பொறுப்பு முழுவதையும் எடுத்துச்செய்யும் எனவும் ஆதீனகர்த்தாக்கள் எதனையுமே செய்யமுடியாது எனவும் முரணானகருத்துடன் செயற்படத்தொடங்கினர். இந்த மனப்பாங்குதான் கட்டுமானப்பணிகளில் எமக்கு இடையூறு ஏற்படுத்த அவர்களைத் தூண்டியது. இந்நிலையில் உள்ளக வேலைகள் அனைத்தும் எம்மால் பூர்த்திசெய்யப்பட்டிருந்த நிலையில் வைரவர் சந்நிதானமும் வசந்தமண்டபமும் அடியார்களின் பங்களிப்பில் நிர்வாகத்தின் பொறுப்பில் நடைபெற்றுவந்தன. அவற்றை அவர்களால் பூர்த்திசெய்ய முடியாதுபோனதால்  அல்லது கும்பாபிஷேகத்தை குழப்பும் தடுக்கும் நோக்கில் அதன் நிர்மாணப்பணிகளை வேண்டுமென்றே தாமதப்படுத்தி வேலைகளை நிறுத்தியிருந்தனர். கும்பாபிஷேகத்தை நடத்தவிடாது குழப்ப பாரிய சதிகளை செய்யமுனைந்தனர்.

இருப்பினும் தைப்பபொங்கல் தினத்திலன்று அடியவர்கள், நிர்வாகசபையினர் அனைவரையும் அழைத்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு நிலைப்பாடுகளை விளக்கி கும்பாபிஷேகம் செய்யப்படவேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தியதுடன் நிர்வாக சபையினர் ஒத்துழைப்பு தரமறுத்தாலும் எம்மால் கும்பாபிஷேகம் எம்மால் நடத்தப்படும் எனத் தெளிவுபடுத்தியிருந்தோம்.

அவர்கள் கும்பாபிஷேகத்திற்கு  ஒத்துழைப்புத்தர மறுத்தது மட்டுமன்றி அதற்காக எம்மால் மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்து ஒழுங்குகளையும் தடுத்து நிறுத்தியிருந்தனர். அதன்விளைவாக பிரதம குருக்களை கும்பாபிஷேகம் செய்யக்கூடாது என அவரது வீடுசென்று மிரட்டிப் பணியவைத்துள்ளனர். மேலும் ஒழுங்குசெய்யப்பட்ட  மேளம், பந்தல் அமைப்பினர், ஒலிபெருக்கி உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினரையும் தடுத்துநிறுத்தி இழிசெயலை செய்ய ஆரம்பித்தது மட்டுமன்றி எமது குடும்பத்தாரையும் இழிவாகவும் கொச்சையாகவும் பேச ஆரம்பித்தனர்.

இத்தனைக்கும் மேலாக முன்புறமும் வசந்த மண்டபத்திலிருந்து மடைப்பள்ளி வரையிலாக போடப்பட்டிருந்த ஓடுகளையும் விஷமத்தனமாக கழற்றி எறிந்து கோவில் சுற்றுப்பிரகாரம் முழுவதும் இறைத்துவிட்டனர். நிலைமைகள் மோசமடைந்ததால் பொலிஸ் முறைப்பாடு நீதிமன்றம் என செல்லவேண்டிய அத்தனை இடங்களுக்கும் சென்று இவ்வாறான குழப்பங்களைத் தடைசெய்ய நீதிமன்ற ஆணை பெறப்பட்ட பின்னரே எம்மால் தொடர்ந்து கோவிலை துப்புரவு செய்ய முடிந்ததுடன் நிர்வாகத்தினரால் குறையாக செய்யாது விடப்பட்ட நிர்மாண வேலைகளையும் எமது சொந்த செலவில் பூர்த்தி செய்து கும்பாபிஷேகத்தினையும்  அதனைத்தொடர்ந்து மண்டலாபிஷேகம் மற்றும் சங்காபிஷேகம் என்பன முற்றுமுழுதாக நவமணி ஐயா அவர்களின் பிள்ளைகளான நாமே பொறுப்பெடுத்தும் செய்திருந்தோம்.

அத்துடன்  பிள்ளையார் ஆதிமூலம் அர்த்தமண்டபம், முன் முகப்பு வேலைப்பாடு மற்றும் கிணறு என்பன எமது சொந்த செலவில் நிர்மாணிக்கப்பட்டது. அவ்வாறே அம்பாள் ஆதீமூல தூபி தவிர்ந்த தரிசன மண்டபம் வரையிலான அனைத்து உள்ளக வேலைகiளும் எம்மால் பூர்த்தி செய்யப்பட்டன.

இதுவே உண்மையான நிலைப்பாடு.

இவற்றினை கும்பாபிஷேக போட்டோக்கள் மூலம்  பேஃஸ்புக் மூலம் அறிந்திருப்பீர்கள்.
​
எமது இணையத்தளத்திலும் இவைதொடர்பான தகவல்கள் போட்டோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எமது இணைய முகவரி அனைவருக்கும் தெரிந்ததே: நீங்களும் அவற்றை பார்வையிட்டு உண்மைநிலையை புரிந்துகொள்ள முடியும். 

தயவுசெய்து இதனை உங்களது இணையத்தில் பதிவேற்றம் செய்யமுடிந்தால் செய்யவும். மக்கள் அனைவருக்கும் இவ்வுண்மையை அறிய வாய்ப்பேற்படும்.

நன்றி.

எமது இணையம்: www.mayilaikannaki.com 
இந்தப் பக்கம் visitor counterதடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    Picture

    பதிவுகள்

    November 2019
    May 2019
    January 2019
    November 2018
    July 2018
    February 2018
    January 2018
    December 2017
    November 2017
    October 2017
    September 2017
    February 2017
    October 2016
    July 2016
    July 2015
    February 2014

    முழுப்பதிவுகள்

    All
    கண்ணகாதேவி நிர்வாகம் - 2017
    கண்ணகாதேவி நிர்வாகம் - 2018

    ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்

    மயிலிட்டி

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-23 ourmyliddy.com