அம்பாளின் அருளால் நீங்களும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் நலமுடன் இருக்க அம்பாள் அருள் புரிவாராக.
மேலும், எமது மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை ஸ்ரீ கண்ணகாதேவி ஆலயம் 27 ஆண்டுகளுக்குப்பின் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே. இவ்வாலய கட்டடம், மற்றும் தளபாடங்கள் பொதுமக்கள் வழிபாட்டிற்கு உகந்த நிலையில் இல்லை. எனவே பொதுமக்கள் வழிபாட்டிற்கு இவ்வாலயத்தை புதுப்பிக்கவேண்டியுள்ளது. ஆலயத்தைப் புனரமைப்பது என 02-08-2017 இல் நடந்த ஆலய ஸ்ரீ கண்ணகாதேவி தேவஸ்தான சபையின் பொதுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கிணங்க இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விடையங்களை மேற்கொள்வதற்காக உங்கள் ஆதரவை நாடி நிற்கின்றோம். இவற்றிற்கான செலவீன மதிப்பீடுகள் எடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை எமக்குக் கிடைத்ததும் அவற்றை உங்களுக்கு அறியத்தருகின்றோம். இத்திருப்பணிக்கு பின்வரும் முறையில் நீங்கள் உதவலாம்.
இவ்விடையம் சம்பந்தமாக உங்கள் அபிப்பிராயங்களைக் கூறவும், மேலதிக விபரங்களை அறிவதற்கும் இச்சபையின் தலைவர் திரு கருணாகரனுடன் தொடர்புகொள்ளவும்.
ஆலய திருப்பணிக்கு உங்கள் ஆதரவை தருமாறு திரும்பவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.
- மக்களின் இடப்பெயர்வுக்கு முன்பு ஆலயத்தில் குறிப்பிட்ட திருப்பணிகளை செய்தவர்கள் அல்லது அவர்களின் சந்ததியினர் அத்திருப்பணியைப் போறுப்பேற்றுச் செய்யலாம்.
- உங்களால் முடிந்த திருப்பணியை நீங்கள் பொறுப்பெடுத்துச் செய்யலாம்
- உங்களால் முடிந்த ஒரு கணிசமான தொகையைத் தந்துதவலாம்.
- சிறு துளி பெரு வெள்ளம் ஆவது போல மாதா மாதம் அல்லது வசதி உள்ளபோது உங்களால் முடிந்த தொகையை தந்துதவலாம்.
இவ்விடையம் சம்பந்தமாக உங்கள் அபிப்பிராயங்களைக் கூறவும், மேலதிக விபரங்களை அறிவதற்கும் இச்சபையின் தலைவர் திரு கருணாகரனுடன் தொடர்புகொள்ளவும்.
ஆலய திருப்பணிக்கு உங்கள் ஆதரவை தருமாறு திரும்பவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.
திருப்பணி விபரம்
1. முழுமையாக இடித்து அழிக்கப்பட்ட ஆலய சுற்றுமதில் கம்பி வைத்த தூண்கள் 10 அடிக்கொன்றுடன் தற்காலிக கேற்றுடன் (வர்ணம் பூசுதலை தவிர) கட்டுதல்.
2. பாலஸ்தாபனம்.
3. ஆதிமூலத் தூபி திருத்தப்பட்டு வர்ணம் பூசுதல்.
4. கற்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், ஸ்தபன மண்டபம் என்பன புனரமைத்தல்.
5. அபிசேகக் கிணறு திருத்துதல்.
6. முழுமையாக சேதமாக்கப்பட்ட மடைப்பள்ளி, களஞ்சிய அறைகள் கட்டுதல்.
7. பூசைக்குத் தேவையான தீபங்கள், குடங்கள், வாளிகள் பொன்ற பொருட்கள் வேண்டுதல்.
8. மடைப்பள்ளிக்குத் தேவையான சமயல் உபகரணங்கள், நெய்வேத்திய பாத்திரங்கள் வேண்டுதல்.
9. வெளிக் கிணறு கட்டுதல்.
10. சேதமாக்கப்பட்ட உள் வீதி கொட்டகை (கூரைகள், நிலங்கள்) புதிதாக அமைத்தல்.
11. சேதமாக்கப்பட்ட வசந்த மண்டபம் புதிதாகக் கட்டுதல்.
12. வைரவர் சந்நிதானம் அமைத்தல்.
13. மின் இணைப்பு மற்றும் மின் விளக்குகள் பொருத்துதல்
14. தோப்புப் பிள்ளையார் கோயில் திருத்தி அமைத்தல். (கிணறு, மணிக்கூட்டுக் கோபுரம் உட்பட)
15. பஞ்சலோக எழுந்தருளி அம்மன் விக்கிரகம் செய்தல்.
16. வாகனங்கள் செய்வித்தல்.
17. வாகன சாலை கட்டுதல்.
18. இராஜகோபுரம் திருத்தி அமைத்தல்.
19. மணிக்கூட்டுக் கோபுரங்கள் திருத்தி அமைத்தல்.
20. கோபுர முன் கொட்டகை கட்டுதல்.
21. காண்டா மணிகள் செய்வித்தல்.
22. பூங்காவன மண்டபம் திருத்துதல்.
23. சித்திரத்தேர் செய்வித்தல்.
24. தேர் முட்டிகட்டுதல்.
25. அன்னதானமடம் கட்டுதல்.

இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.