மயிலிட்டியில் அதே இடத்தில் பேச்சியம்மன் என வழங்கும் முத்துமாரியம்மன் ஆலய மூலஸ்தானத்திற்கான அத்திவாரம் இடும் நிகழ்வு 05/09/2019 வியாழக்கிழமை காலை திருப்பூர், மயிலிட்டியில் இடம்பெற்றது. அதன் சில பதிவுகள, படங்களுடன்:
:கண்ணன் தருண்..
:கண்ணன் தருண்..
இற்றைக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் உலகாத்தை ஆச்சி என்பவரால் கிராமியதெய்வமாக பூசிக்கப்பட்டு எமது மூதாதையர்களின் முதுசமாகவும் வேண்டியவர் வேண்டுதலை நிறைவேற்றும் விசாலாட்சியாகவும் எமது குடிகளின் குலதெய்வமாகவும் விளங்கியது பேச்சியம்மன் ஆலயம்.
திருப்பூர், மயிலிட்டியில் எமது மூத்தோர்களால் 1984ம் ஆண்டு காலப்பகுதிகளில் பொழிகற்கள் கொண்டு அம்மாளாச்ச்சிக்கான ஆலயம் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளை நாட்டில் இடம்பெற்ற யுத்தம் நம் உறவுகளை புலம்பெயரவைத்தது.
"இடம்பெயர்ந்தோர்" என்ற அடைமொழியுடன் கடந்த மூன்று தசாப்தங்களைக் கடந்து கொண்டிருக்கின்றோம். இடம்பெயர்ந்து அயல் ஊர் ஆலய திருவிழாக்களில் நாம் பார்வையாளர்களாக மட்டுமே இருந்தோம்.
மீண்டும் நாம் ஊருக்கு வந்தபோது ஆலயம் முற்றுமுழுதாக நிர்மூலமாக்கப்பட்டிருந்தது. கருவறைப் பொழிகற்கள் இடித்து கடலிலே விடப்பட்டிருந்தன. ஆனாலும் நமது அம்மாளாச்சியின் அருளால் மக்களின் முயற்சியால் மீண்டும் எமது ஊரில் அதே இடத்தில் பேச்சியம்மன் என வழங்கும் முத்துமாரியம்மன் ஆலயம் அருள்பாலிக்கவுள்ளது.
அதற்கான அத்திவாரம் இடும் நிகழ்வு திருப்பூர், மயிலிட்டியில் 05/09/2019 வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. இந் நன்நாளில் கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும் அன்னையின் ஆசியுடன் நன்றி கூறுகின்றோம்.
: வசந்த் சகாதேவன்.