விசேட பொதுக்கூட்ட அறிவித்தல்!
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் அருள்மிகு பேச்சி அம்மன் என்று வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 11/01/2019 அன்று காலை 9.30 மணிக்கு மயிலிட்டியில் கட்டப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்ட புதிய பலநோக்கு மண்டபத்தில் நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக மயிலிட்டி, திருப்பூர் கடற்கரை பகுதியில் புதிய ஆலயத்தை கட்டுவதற்கான முன்னாயத்த வேலைகளை ஆலய நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது.
புலம்பெயர் வாழ் திருப்பூர் ஒன்றிய உறவுகள் சிலர் மற்றும் தாயகத்தில் வாழும் சில உறவுகளும் இயற்கை அனர்த்த காலங்களில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்ற காரணத்தை முன்னிறுத்தி கடற்கரையை அண்மித்ததாக ஆலயம் அமைப்பது குறித்த முடிவை மீள் பரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
அதற்கமைவாக கடற்கரையில் இருந்து மேல் நோக்கியதாக இடத்தை தெரிவு செய்து ஆலயத்தை அமைப்பதாயின் பழைய ஆலயம் இருந்த காணிக்கு அருகாமையில் உள்ள சிலரது காணிகள் அவர்களது மனபூர்வமான சம்மதத்துடன் பெறப்பட வேண்டும்.
அதற்கான முன் முயற்சிகளை ஆலய நிர்வாகம் மூத்தவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் மேற்கொண்டு வருகின்ற போதிலும் தேவையான இடத்தை இன்னும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த கால தாமதம் குறித்து புலம்பெயர் வாழ் உறவுகள் கேள்வி மேல் கேள்விகளை எழுப்பி வருகின்றார்கள்.
ஆகவே தற்போதைய நிலையில் நின்று ஆலயத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் மயிலிட்டி திருப்பூர் ஒன்றிய மக்களின் மேலான கருத்துகளை கேட்டறிவதற்கும், அவர்களின் அனுமதியுடன் இறுதி முடிவினை எடுப்பதற்குமாக இவ் விசேட பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மயிலிட்டி, திருப்பூர் ஒன்றியத்தை சேர்ந்த மக்கள், ஓரிடமாக ஒருமித்த மக்கள் குழாமாக இல்லாது பல்வேறு ஊர்களில் பரந்துபட்டு வாழ்ந்து வரும் சூழலில் கூட்ட அறிவிப்புகளை அனைவரது கவனத்திற்கும் கொண்டு சேர்ப்பதென்பது அதுவும் குறித்த காலத்திற்குள்ளாக செய்வதென்பது சவாலானதாகும்.
எனவே இவ் அறிவித்தலை மயிலிட்டி, திருப்பூர் ஒன்றியத்தை சேர்ந்த உறவுகளுக்கான தனிப்பட்ட அறிவிப்பாக கருதி இவ்விசேட பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பாக இத்தகவலை அறியும் புலம்பெயர் வாழ், உள்ளூர் உறவுகள் இது குறித்து உங்கள் குடும்பத்தவர், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு தெரியப்படுத்துமாறு வினயமாக கேட்டுக் கொள்கின்றோம்.
காலம் : 11/01/2019 வெள்ளிக்கிழமை நேரம் : காலை 9.30 மணி இடம் : பலநோக்கு மண்டபம், பிரதான வீதி, மயிலிட்டி
குறிப்பு : பேருந்தில் வருகை தரும் உறவுகள், பருத்தித்துறையில் இருந்து கீரிமைலைக்கு காலை 8.15 இற்கு புறப்படும் பேருந்தில் வருகைதருவதன் மூலம் சரியான நேரத்தில் விசேட கூட்டத்திற்கு சமூகமளிக்க முடியும்.
நன்றி. இரா.மயூதரன் செயலாளர் மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் மற்றும் அருள்மிகு பேச்சி அம்மன் என்று வழங்கும் அருள்மிகு முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன சபை.