மயிலிட்டி திருப்பூர் பேச்சி அம்மன் ஆலய வளாகத்தில் நவராத்திரி விழாவின் இறுதி நாள் நிகழ்வு நடைபெறவுள்ளது!
மயிலிட்டி திருப்பூர் பகுதியில் அருள்மிகு பேச்சி அம்மன் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் நவராத்திரி விழாவின் இறுதி நாள் நிகழ்வு வெகு சிறப்பாக நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மயிலிட்டி திருப்பூர் பகுதியில் அருள்மிகு பேச்சி அம்மன் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் நவராத்திரி விழாவின் இறுதி நாள் நிகழ்வு வெகு சிறப்பாக நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை மதியம் 2.00 மணியளவில் பேச்சி அம்மன் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் இந்நிகழ்வு நடைபெற உள்ளது. ஆகவே மயிலிட்டி திருப்பூர் ஒன்றியத்தைச் சேர்ந்த அன்பு உறவுகளும் பேச்சி அம்மன் அடியவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இதனை முன்னிட்டு எதிர்வரும் புதன் கிழமை மாலை 3 மணியளவில் குறித்த இடத்தை துப்பரவு செய்வதற் மயிலிட்டி திருப்பூர் ஒன்றியத்தை சேர்ந்த இளைஞர்கள் முன்வந்துள்ளார்கள். அன்றைய தினமும் அன்பு உறவுகள் வருகை தந்து ஒத்துழைப்பினை நல்கும் வண்ணம் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கின்றோம். புதிய ஆலயம் உருவாக்கப்படும் வரை பேச்சி அம்மன் அன்படியார்களின் ஆறுதலுக்காகவும் தேறுதலுக்காகவும் அருள்மிகு பேச்சி அம்மன் ஆலயம் முன்னர் இருந்த இடத்தில் தற்காலிகமாக கொட்டகை ஒன்று அமைக்கப்பட்டு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆரம்ப வேலைகள் இன்று நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி. இரா.மயூதரன். செயலாளர் மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் மற்றும் அருள்மிகு பேச்சி அம்மன் என்று வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன சபை. |