மயிலிட்டி திருப்பூர் பேச்சி அம்மன் ஆலய வளாகத்தில் நடைபெறவுள்ள நவராத்திரி விழாவிற்கு அனைவரும் வருக!
மயிலிட்டி திருப்பூர் பகுதியில் அருள்மிகு பேச்சி அம்மன் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் நவராத்திரி விழாவின் இறுதி நாள் நிகழ்வு வெகு சிறப்பாக நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மயிலிட்டி திருப்பூர் பகுதியில் அருள்மிகு பேச்சி அம்மன் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் நவராத்திரி விழாவின் இறுதி நாள் நிகழ்வு வெகு சிறப்பாக நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை மதியம் 2.00 மணியளவில் பேச்சி அம்மன் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் இந்நிகழ்வு நடைபெற உள்ளது. ஆகவே மயிலிட்டி திருப்பூர் ஒன்றியத்தைச் சேர்ந்த அன்பு உறவுகளும் பேச்சி அம்மன் அடியவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
புதிய ஆலயம் உருவாக்கப்படும் வரை பேச்சி அம்மன் அன்படியார்களின் ஆறுதலுக்காகவும் தேறுதலுக்காகவும் அருள்மிகு பேச்சி அம்மன் ஆலயம் முன்னர் இருந்த இடத்தில் தற்காலிகமாக கொட்டகை ஒன்று அமைக்கப்பட்டு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. |