மயிலிட்டி திருப்பூரில் அமைந்திருந்த அருள்மிகு பேச்சியம்மன் ஆலயம் மீள் புனருத்தானம் செய்யப்பட உள்ளதையிட்டு முக்கிய முடிவுகள் எடுக்கபடுவதற்கு ஏதுவாக அவசர ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆலைய உருவாக்கம் குறித்து துறைசார் விற்பனர்களிடம் ஆலோசித்து இறுதி முடிவை நிர்வாகம் எடுப்பதற்கு கடந்த பொதுக்கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக ஆலயம் அமைப்பதற்கான நிலையம் தேர்வு செய்வது உள்ளிட்ட விடயங்களில் பாண்டித்தியம் பெற்றவராகத் திகழும் ஒருவரை அழைத்து கலந்துரையாடல் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாளை 06/08/2018 திங்கள் மதியம் மயிலிட்டி திருப்பூர் பேச்சியம்மன் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் இவ் ஒன்றுகூடல் நடைபெற உள்ளது.
மயிலிட்டி திருப்பூர் ஒன்றிய நிர்வாகிகள், காப்பாளர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் மற்றும் ஆலய விடயங்களில் அக்கறையும் பற்றும் கொண்ட மூத்தவர்கள் நாளை திங்கள் மதியம் 11.30 மணியளவில் தவறாது கலந்துகொள்ளுமாறு தயவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இரா.மயூதரன்
செயலாளர்
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் மற்றும் ஆலய பரிபாலன சபை