***பத்தாம் ஆண்டு நினைவலைகள்***
********* ********* ********* *********
அமரர் .மயிலிட்டியூர் சின்னத்துரை நவரத்தினம் அவர்கள் .
செந்தணலில் வெந்ததுவோ செங்கரங்கள்
-------------------------------------------------------------
விஸ்வகுலம் தந்த கலை விருட்சமின்று
வேரிழந்து வீழ்ந்ததுவே மாநகரிலே
சங்கவத்தை ஐங்கரனை அமைத்து நின்ற
சங்கிலியாம் தவண்டையவர் மரபினிலே
வந்துதித்து வள்ளலெனும் பெயரெடுத்து
சிற்பவாரிதியாய் ஆகி நின்றாய் நின் திறத்தினால்
(விஸ்வகுலம் )
********* ********* ********* *********
அமரர் .மயிலிட்டியூர் சின்னத்துரை நவரத்தினம் அவர்கள் .
செந்தணலில் வெந்ததுவோ செங்கரங்கள்
-------------------------------------------------------------
விஸ்வகுலம் தந்த கலை விருட்சமின்று
வேரிழந்து வீழ்ந்ததுவே மாநகரிலே
சங்கவத்தை ஐங்கரனை அமைத்து நின்ற
சங்கிலியாம் தவண்டையவர் மரபினிலே
வந்துதித்து வள்ளலெனும் பெயரெடுத்து
சிற்பவாரிதியாய் ஆகி நின்றாய் நின் திறத்தினால்
(விஸ்வகுலம் )
சிற்பமொடு ஆகமங்கள் ஜோதிடங்களும்
சேர்த்து மிக கற்றுப் பெரும் ஸ்தபதியாகினாய்
மாணவர்கள் பலருக்குந்தன் மாண்பினை தந்தாய்
இந்த மாநிலமே உள்ள வரை வாழ்ந்திருப்பாய்
(விஸ்வகுலம் )
நாட்டு நிலை மாறுமென்று காத்திருந்தோம்
நாங்கள் நம் மயிலை நகர் சென்று நற்பணி செய்ய
அந்த நிலை மாறி நீயும் அங்குதவு முன்
அந்த விண்ணவர்கள் வேண்டி நின்னை விரைந்தழைத்தர்
(விஸ்வகுலம் )
கோப்பாய் இருபாலை தனில் கூடி நின்று
எங்கள் கோமகனை அஞ்சலித்துப் பூதவுடலை
உப்பு வெளிக்கரையினிலே உயர்ந்தெரிந்த
தீயினுக்கே கையளித்து தேம்பி அழுதோம்
(விஸ்வகுலம் )
செந்தணலில் வெந்ததுவோ செங்கரங்கள்
பார் வேந்தர்களும் போற்றி நின்ற பொற்கரங்கள்
சிற்பமதற்குயிர் தந்த திருக்கரங்கள்
தீயில் நீறாகி நீரிலிட்டோம் கீரிமலையிலே
(விஸ்வகுலம் )
எங்களுயர் ரத்தினமே நவமணியே
நீயும் மீண்டொருக்கால் மயிலையிலே பிறப்பெடுத்து
எம்மவர்க்கு ஆசானாய் என்றுமிருக்க
எங்கள் ஐங்கரனே நின் அருளை எமக்கருள்வாய்
(விஸ்வகுலம் )
மயிலைக் கவிஞன் திரு .சண்முகநாதன் அவர்கள்