நன்றி நவிலல்
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் - உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு"
இக் குறளுக்கு அமையவும் தமிழர்தம் பண்பாட்டுக்கு அமையவும் அனைவருக்கும் சிரம்தாழ்த்தி இருகைகூப்பி நன்றி தெரிவிக்கின்றோம்.
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் - உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு"
இக் குறளுக்கு அமையவும் தமிழர்தம் பண்பாட்டுக்கு அமையவும் அனைவருக்கும் சிரம்தாழ்த்தி இருகைகூப்பி நன்றி தெரிவிக்கின்றோம்.
கடந்த 06.07.2017 அன்று பரமபதம் எய்திய எமது அன்புத்தெய்வம் எமது வாழ்விற்கு வளம் பல சேர்த்து அமரராகிய எமது முழு முதற்கடவுள் "பொன்னம்பலம் பேரின்பம்" அவர்களின் பிரிவுகேட்டு தாய்நாட்டிலும், பிரான்சிலும், நெதர்லாந்திலும், கனடாவிலும் இருந்து ஓடோடி வந்து உதவி புரிந்தோர், அனுதாபம் தெரிவித்தோர், கண்ணீர் அஞ்சலி வெளியிட்டோர், அஞ்சலி செலுத்தியோர் இறுதிக்கிரியை மற்றும் ஊர்வலத்தில் கலந்துகொண்டோர், எமக்கு ஆறுதல் வார்த்தைகளை நேராகவும், முகநூல் ஊடாகவும், தொலைபேசியூடாகவும் கூறியோர். முகநூலில் பதிவிட்டோர், உணவு குளிர்பாணம் வழங்கியோர், போக்குவரத்து வசதி வழங்கியோர், ஒலி ஒளி வழங்கியோர், நிலானி பந்தல் சேவைனருக்கும், எமது அறிவித்தலை வெளியிட்ட பத்திரிகைகளுக்கும், நமதுமயிலிட்டி.கொம்(பிரான்ஸ்) பொறுப்பாளருக்கும் மற்றும் அந்தியேட்டி கிரியைகள் சிறப்புற உதவிய நல் உள்ளங்களுக்கும், ஞாபகார்த்த கல்வெட்டு வெளியிட உதவிய S.P.M அச்சகத்தினருக்கும் மற்றும் ஆலோசனை வழங்கியோருக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் யாருக்காவது நன்றி கூற தவறி இருந்தால் அவர்களுக்கும் எமது சிரம்தாழ்த்தி இரு கைகூப்பி உள்ளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
குடும்பத்தினர்
குடும்பத்தினர்
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.