நமது மயிலிட்டி
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள் >
      • அன்ரன் றாஜ்
    • பொன்னையா மலரவன்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

புனித அந்தோனியாரும் துர்க்கை அம்மனும்

19/5/2013

1 Comment

 
Picture
புனித அந்தோனியாரும் துர்க்கை அம்மனும்

நான் எனது ஊர் மயிலிட்டியிலிருக்கும் போது ஒவ்வொரு செவ்வாயும் ஊறணி புனித அந்தோனியாரிடம் செல்வது வழக்கம். காரணம் ஆண்குழந்தை வேண்டும்  என்று ஊறணி அந்தோனியாரிடம் என் பெற்றோர் வேண்டி  நான் பிறந்ததினால் எனக்கு அவரின் பெயர் இணைக்கப்பட்டது. 

Picture
இதேபோல் ஓர் செவ்வாய்கிழமை, மயிலிட்டி காணிக்கைமாதா கோவிலுக்கு பக்கத்திலிருந்த மணல் ஒன்றியத்திலிருந்து நாம் சிலர் அந்தோனியாரிடம் எனது காரில் புறப்பட்டோம். அந்த நேரத்தில் எரிபொருள் தட்டுப்பாடான காலம். வாகனத்திற்கான எரிபொருளை வீட்டு வாசலில் போத்தலில் விற்பனை செய்த காலம் நான் வாங்கிய எரிபொருளில் கலப்படம் செய்து இருந்ததால், கார் சீராக ஓடமுடியாது இருந்தது. அந்தோனியாரிடம் சென்றுவிட்டு துரைசிங்கம் அண்ணாவிடம் கொண்டே காட்டுவம் என்று எண்ணிக் கொண்டு வந்தேன். கோயில் அருகில் வரும் போது திடீர் மாற்றம், முதலில் திருத்தி விட்டு பின் கோவிலுக்கு செல்வோம். இதை நான் தீர்மானிக்கவில்லை அந்தோனியார்தான் திசை திருப்பினார் என்று உணர்கின்றேன்.

காங்கேசன்துறையை நோக்கி செல்லும் போது 'மீசை'யின் பட்டடைக்கு (கராஜ்) பக்கத்தில் பல இளைஞர்கள் நின்றார்கள். எனது வண்டியை மறித்தார்கள். அவர்கள் அனைவரும் எம் ஊர் இளைஞர்கள். என்னைக் கண்டதும் றாஜ் இன்னார் சூட்டுக் காயத்துடன் இருக்கின்றார், உடனடியாக வையித்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றனர். 

எனது வயது 20 கூட இல்லை. இளம் கன்று பயம் அறியாது என்பது போல். எந்த மறுப்பும் சொல்லாது பின்னாலிருந்த எனது நன்பர்களை இறங்குமாறு பணித்து காயப்பட்டவரை திரு.மகேந்திரம் (நயிலோன்), திரு.சிவம்பு இருவரும் கொண்டுவந்து ஏற்றினார்கள். அவரின் கண்ணில் குண்டு அடிபட்டு  இரத்தம் கொட்டியபடி இருந்தது. வண்டி மிக வோகமாக புறப்பட்டது. காயப்பட்டவர்கள் வழக்கமாக ஐயோ, அம்மா, வலிக்குது என்றுதான் வழமையாக கத்துவார்கள். இவர் அதற்கு மாறாக வீரமாக ஆவேசமாக கத்தினர்தினார். அது எனக்கு சற்று ஆச்சரியம் தந்தது. காங்கேசன்துறைச் சந்தியால் திரும்பும் போது மிகவும் உரத்த குரலில் கத்தி தனது உடலை மேலே எழுப்பி அதன் பின் எந்த சத்தமும் இல்லை. எனக்கு சற்று பயமாயிருந்தது. மூச்சு நின்று விட்டதா என சந்தேகம் ஏற்படுத்தியது. அந்தோனியார் கை விடமாட்டார் என்ற நம்பிக்கையில் தெல்லிப்பளை வையித்தியசாலை நோக்கி செல்கின்றேன். கலப்பட எரிபொருள் அப்பப்ப என் வேகத்தை கட்டுப்படுத்தி தன் வேலையை காட்டி சீராக என் வேகத்தில் செல்லமுடியாது எரிச்சலை ஊட்டியது.

தெல்லிப்பளை சந்தி வந்துவிட்டது இனி வைத்தியசாலைதான் என்றால், வையித்தியசாலை தெருவிற்கு போகமுடியாதவாறு இருந்தது எனக்கு மிகவும் கடுப்பாகிவிட்டது. இனி யாழ்ப்பாணம் வைத்தியசாலைதான் என்றாலும் எனது காரின் எரிபொருளின் நிலை தாக்குப் பிடிக்குமா கேள்விக்குறியாகவே இருந்தது. 

Picture
சற்றும் தாமதியாது அந்தோனியார் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, என் மனதை கட்டுப்படுத்திக் கொண்டு குறை உயிரையும் கொடுப்பதா என்று பின் புறமாக என் வண்டியத் திருப்பி பீரிட்டு மீண்டும் யாழ் வையித்தியசாலையை நோக்கி புறப்பட்டேன். (அந்தோனியாரிடமிருந்து துர்க்கை அம்மன் பொறுப்பெடுத்துக் கொள்வார் என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.)

என் வண்டியின் வேத்தை என்னால் தீர்மானிக்க முடியவில்லை. அது தான்  அந்த கலப்பட எரிபொருள் என் வேகத்தை தடைசெய்தது. இதற்கு மேல் எனக்கு பொறுமையில்லை. ஏதாவது ஒரு வாகனத்தை உதவிக்கு கேட்போம் என தீர்மானித்தேன். பணம் கொடுத்தாலும் தம் உயிரை பணயம் வைக்க யார் தான் வருவார்கள். அப்படியிருந்தும் ஓர் 'மினிபஸ்' சேவையில் இல்லாது பின் புறம் வந்தது. கையை காட்டி உதவி கேட்டேன். அவர்கள் எம்மை சந்தியில் பார்த்தவர்கள். மிக வேகமாக நிறுத்தாது சென்றுவிட்டார்கள். இதை எழுதும் போது கூட என் கண்ணில் நீர் வடிவதை தவிக்கமுடியாது உள்ளது.

நான் தொடர்ந்தும் எனது பாதையில் சென்று கொண்டிருந்தேன். எதிரே வரும் ஏதாவது ஒரு வாகனத்தை எனது வண்டியை குறுக்கே விட்டு மறிப்பது என தீர்மானித்து கொண்டு செல்லும் போது துர்க்கை அம்மன் கோயில் நெருங்குகிறது. அது தான் செவ்வாய் கிழமைக்காரி அன்று செவ்வாய் கிழமை கை விட்டு விடுவாளா.

எதிரே ஓர் வெள்ளைக் கார் வருகிறது. 'கேம்பிறிச்' EN-7661 கார் குறுக்கே விட்டுமறித்தேன். அதன் பின் தான் தெரிந்தது காயப்பட்டவரின் சிறிய தந்தை என. அவர் அந்தநேரம் துர்க்கை அம்மனிடம் வந்தாரா அல்லது அம்மன் அழைத்து வந்தாவா என்பது இப்போதும் நினைக்கையில் அதிசயமாய்த்தான் இருக்கின்றது. அவர் அந்த நேரத்தில் நல்ல வசதி படைத்தவர். வண்டியின் உள்ளேயிருந்த சிவம்பு ஆவேசமாக திட்டினார். நான் இறங்கிச்சென்று பணிவாக நடந்ததை விளக்கினேன். அவர் மறுப்பேதுமின்றி தனது காரில் ஏத்துமாறு கூறினார். நான் மீண்டும் ஊரிற்கு திரும்பினேன் அவர்கள் யாழ் வையித்தியசாலைக்கு சென்றார்கள்.

காங்கேசன்துறை சந்திக்கு வரும்போது காயப்பட்டவரின் தாயார் காலில் செருப்பு கூட இல்லாது ஓடி வந்து இதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாது அந்த தாயின் தவிப்பை வார்த்தையால் வடிக்கமுடியாது. தனது மகனுக்கு என்ன நடந்ததோ என்ற மரண வேதனை. உடனே நான் எனது வண்டியை நிறுத்தி அவருக்கு நடந்ததை கூறி சமாதானம் செய்து அவரை அவரின் வீட்டில் கொண்டு விட்டுவிட்டு  எனது வீட்டிற்கு சென்று விட்டேன்.

அந்தேனியாரிடம் போகவில்லை என்ற வருத்தம் என் உள்ளிருந்தது.

பிற்பகல் ஆறு மணிக்கு சயிக்கிளில் ஊறணி அந்தோனியாரிடம் செல்கின்றேன் ஏற்றிச் சென்ற கார் திரும்பி வருதைக் கண்டேன். அவர் காரை நிறுத்தி தம்பி  உயிருக்கு பயம் இல்லை கண் ஒன்று தான் பிரச்சனை என்று தகவல் பரிமாறினார். பின் நான் அந்தேனியாருக்கு நன்றி கூறி விட்டு சில நாள்களின் பின் எனது பணி காரணமாக இந்தியாவிற்கு சென்று தங்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.

மறுபடி காயப்பட்டவரை பார்க முடியவில்லை. வெளிநாடு செல்வதற்காக கொழும்பில் வந்து நிற்கும் பொழுது ஓருநாள் எமது ஊர் நண்பர் பழனியுடன் 4ம் குறுக்குத்தெருவில் சந்திக்க நேர்ந்தது. பழனி என்னுடன் வந்து உரையாடினார். காயப்பட்டவர் சற்று விலகி தூரத்தில் நின்று பழனிக்காக காத்திருந்தார். என்னுடன் பேசவில்லை. எனக்கு மிக வேதனையைத் தந்தது.ஏன் இப்படி இவர் செய்கிறார் என விடை தெரியாத பல வினாக்கள் என்னுள். தற்போது அவர் பாரீஸில் வசிக்கின்றார். நான் பாரீஸ் சென்ற போது அவரின் சகோதரரை சென்று சந்தித்தேன். ஏனோ தெரியவில்லை அவரை பார்க்கத் தோன்றவில்லை.

பின் ஒரு நாள் அந்த நபர் சம்மந்தமாக எம் குடும்ப நண்பர் இராஐதுரை உதயன் உடன் பேசும்பொழுது, இச் சம்பவங்களை அவரிடம் சொன்னேன். மறுநாள் பாரீஸிலிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அது தான் அந்த காயப்பட்டவர். ஜயோ, றாஜ் மன்னித்து கொள்ளுங்கோ எனக்கு இது எதுவும் தெரியாது. என நீண்டநேரம் எமது உரையாடல் தொடர்ந்தது.

யார் இந்த காயப்பட்டவர் என நீங்கள் செல்லுங்கோ என கேட்பது எனக்கு கேட்கின்றது. பலருக்குத் தெரிந்திருக்கலாம். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் உங்கள் கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நானும் இவர் யார் என்பதை பின்பு உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். 

நன்றி: ஊறணி புனித அந்தோனியார்
நன்றி: தெல்லிப்பளை துர்க்கை அம்மன்

ஆக்கம்: ஞா. அன்ரன்
பதிவு: 19/05/2013



1 Comment
Shan link
21/5/2013 01:59:44 am

சொந்தங்கள் தாய் தந்தது, இந்த பந்தங்கள் யார் தந்தது??

Reply



Leave a Reply.

    Picture

    என்னைப்பற்றி

    அன்ரன் றாஜ் ஞானப்பிரகாசம்
    மயிலிட்டி

    பதிவுகள்

    January 2023
    November 2021
    December 2014
    November 2014
    May 2014
    April 2014
    January 2014
    December 2013
    May 2013
    January 2013

    அன்ரன் றாஜ் பக்கத்தினை முகநூல் நட்புக்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!

    முழுப் பதிவுகள்

    All
    Myliddy 1964

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-23 ourmyliddy.com