நமது மயிலிட்டி
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013,12,11
    • நல்வரவு! 2013,12,11
  • ஆலயங்கள்
    • பேச்சியம்மன் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • சங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்.
    • "மீள்குடியேற்றக்குழு"
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • அன்ரன் ராஜ் படைப்புக்கள் >
      • அன்ரன் றாஜ்
    • பொன்னையா மலரவன்
    • சுகுமார் தியாகராஜா
    • மயிலை வசந்தரூபன்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • அருண்குமார் படைப்புக்கள்
    • இரா.மயூதரன்
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • Alvit Vincent
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • சங்கீதா தேன்கிளி
    • மகிபாலன் மதீஸ்
    • அஞ்சலி வசீகரன்
    • "ஜெயராணி படைப்புக்கள்"
    • மயிலையூர் தனு
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • சிந்தனை வரிகள்
    • Nirupa Sabaratnam
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • கௌதமன் கருணாநிதி
    • தயாநிதி தம்பையா
    • மயிலை வசந்த்
    • மயிலை துரை
    • ஈழ விரும்பி
    • சுதா நவம் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சாந்தன் படைப்புக்கள் >
      • சாந்தன் படைப்புக்கள்
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக!"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • ஜீவா உதயம் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
  • மரண அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல் 2022
    • மரண அறிவித்தல் 2021
    • மரண அறிவித்தல் 2020
    • மரண அறிவித்தல் 2019
    • மரண அறிவித்தல் 2018
    • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
    • அமரர் சி. அப்புத்துரை

மயிலிட்டியின் முதல் இழுவைப் படகு - அன்ரன் ஞானப்பிரகாசம்

28/11/2021

0 Comments

 
Picture
எஸ்.ஆர் சகோதரர்கள் எனும் இராசதுரை, சுப்பிரமணியம், பஞ்சலிங்கம், அமிர்தலிங்கம் சகோதரர்கள் அன்று 9 சிறுபடகுகளுடன் முன்னேறிக் கொண்டு வந்த, ஓர் சகோதர ஒற்றுமைக்கு இலக்கான கூட்டு நிறுவனத்தினரால் காரைநகர் சீநோர் நிறுவனத்தில் படகு வாங்குவது இவர்களின் வளக்கமாகவிருந்த போது. இவர்களின் கடைசித் தம்பி அமிர்தலிங்கம் (கட்டையப்பா) நாமும் இப்படி ஒரு இழுவைப்படகு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை தனது அண்ணன் இராசதுரையிடம் கூற அவர் முதலில் அது சிரமம் என்று கூறி தவிர்த்திருந்தார். பின்னர் தம்பியின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சம்மதித்தார்.

பின்னர் வல்வெட்டித்துறையிலுள்ள மேஸ்திரியார் பொன்னரிடம் அணுகி தங்கள் ஆசையை கூறிய போது இவர்களுக்கு இணங்க 42.5 அடி நீளமும் 13.5 அடி அகலமும் கொண்ட இழுவைப் படகு தயாராகுகின்றது. மேஸ்திரியாரின் கை வண்ணத்தில் பல் வேறு படகுகள்;, இழுவைப்படகுகள் தயாரிக்கப்பட்டாலும் அவரே வியக்கும் வண்ணம் அமைந்து அவரின் மனதை தொட்ட தயாரிப்பு எங்கள் ஊரின் முதல் இழுவைப் படகாகிய „இராசலட்சுமி'. மேஸ்திரியாரையே வியக்க வைத்தது.

இதனை வடிவமைத்த போது அவரின் யாட்டிற்கு எதிரேயுள்ள கடலில் இறக்குவதிற்கு இதன் உருவம் ஏற்புடையதாக இல்லாமையினால், அதனை சகடையில் வைத்து இம்பிலிட்டி வெள்ளைக் கடற்கரைக்கு கொண்டு சென்று கடலில் இறக்கப்பட்டது.

இது எந்தக் குறையுமின்றி மிதந்தபோது மேஸ்திரியார் பொன்னர் மனம்குளிர வியக்கவைத்ததை அவரே செல்லி பெருமிதமடைந்தார்.

பின்னர் இழுவைப்படகின் தொழில்நுட்ப வேலைகளை காரைநகர் சீநோர் நிறுவனம் வடிவமைத்து மயிலிட்டிக்கு முதல் இழுவைப்படகு வலம் வந்து மக்களை வியக்கவைத்தது. இதற்கு முதல் வலிச்சல் வலைக்கு செல்லும் படகில் கப்பிபூட்டிய சில சிறியரக இழுவைப்படகுகளிலிருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் முறையான இழுவைப் படகு என்ற பெயர் „இராசலட்சுமி' க்கேயுரியது என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்த இழுவைப்படகின் மீன்பிடி வருமானம் எஸ் ஆர் சகோதரர்களை ஒரு படி மேலே கொண்டுவந்தது. மயிலிட்டியில் மட்டுமன்றி காரைநகர் (நீலன்காடு) நெடுந்தீவு, அனலைதீவு போன்ற இடங்களில் சென்று மீன் பிடித்தலில் சாதனை படைத்தது என்றால் மிகையாகாது. அவற்றை எழுத்தில் தருவதாயின் மிக நீண்டு விடும் அதனால் தங்கள் எண்ணங்களுக்கே விட்டுவிகின்றேன்.

எமது ஊரான மயிலிட்டியில் கப்பல் திருவிழா என்ற விசேடமான திருவிழா நடைபெறும். சாமியை கப்பலில் ஏற்றி கடலில் உலா வருவது. படகில் மின்குமிழ் அலங்காரம் சொல்லி மாளாது. அப்படி அழகாக படகுகளையும் அதன் மேலுள்ள சாமியையும் அலங்கரிப்பார்கள். ஆரம்பத்தில் சிறிய படகுகள் மூன்றை இணைத்து சாமி கடலில் வலம் வருவது ஓர் வழக்கம். „இராசலட்சுமி' என்ற பெரிய படகு வந்தபின் அந்தப்படகின் இருகரையிலும் சிறு படகுகள் இணைத்து „இராசலட்சுமி'யில் அம்மன் வலம்வருவது கொள்ளைஅழகு. அது ஓர் தனி அழகு அம்மன் வலம் வந்த பின் மயிலிட்டி துறைமுகத்தில் கடலில் மிதப்பு மேடை போடப்பட்டிருக்கும். அதன் சிறப்பு தனிச் சிறப்பு. இது எந்த ஊரிற்குமில்லா சிறப்பு. கரையில்நின்று பக்தர்கள் நிகழ்ச்சியைப் பார்ப்பது, துறைமுகத்தை சுற்றியும் பல் வேறு வடிவங்களில் அலங்கரித்து நிற்கும் மின்சார விளக்கு அலங்காரங்கள்.

இவற்றை மீண்டும் எப்ப தான் பார்ப்போம்?

பின்னர் பல பெரிய இழுவைப்படகுகள் வந்ததனால் அதன் உரிமையாளர்கள் தாழும் அம்மனை படகிலேற்ற ஏற்பட்ட ஆசையால் சீட்டுப் போட்டு தெரிவு செய்ய முடிவெடுக்கப்பட்டது. அப்போது பெரும்பாலாக சீட்டு „இராசலட்சுமி'க்கே விழுவது பலரையும் வியக்கவைத்தது.

„இராசலட்சுமியின்' மரணம் மிகக் கொடியது. 1985ம் ஆண்டு கடல் வலயம் போட்டபோது „இராசலட்சுமி', கே.வி.துரைச்சாமியின் ஒரு இழுவைப் படகுகள், நான்கு வள்ளங்கள், எஸ்.ஆர் சகோதரர்களின் இன்னோர் இழுவைப் படகு, ஒரு வள்ளம், வேலும்மயிலின் (ஈ.வி.எம் நிறுவனம்) இரண்டு இழுவைப்படகு, சில வள்ளங்கள். என்னும் எங்கள் ஊர் மக்களுக்கு சொந்தமான பல வள்ளங்கள். (அவர்களின் பெயர்கள் தெரியவில்லை யாருக்காவது தெரிந்திருந்தால் தகவல்களை எனக்கு தந்துதவவும்.நன்றி)  காரைநகரிலிருந்தது. ஓர் நாள் அங்கிருந்த எம் ஊர் மக்களுக்கு சொந்தமான அத்தனை படகுகளையும் காரைநகரிலிருந்த கடற்படையினர் தங்கள் கை வரிசையைக் காட்ட அத்தனை படகுகளும் ஓர் இரவில் தீக்கிரையாகி கடலில் சங்கமித்தன. எமது ஊரிற்கேற்பட்ட பொருளாதார அடியில் இதுவும் ஒன்று.

எம் ஊர் மக்கள் பீனிக்ஸ் பறவை போன்று எரிந்த சாம்பலில் இருந்து மீண்டும் மீண்டும் எழுபவர்கள். ஆம் முப்பது ஆண்டுகளாக சொந்த நாட்டிலும், பிறநாடுகளிலும். ஏதிலிகளாக திரிந்தோம். இன்று மீண்டும் எமது ஊர் உயிர் பெறுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. மீண்டும் வருவோம் எம் தாய் மண்ணே மயிலிட்டி மண்ணே உமை முத்தமிட மயிலிட்டி அன்னையே!

„இராசலட்சுமி' கடந்து வந்த பாதையை முழுவதையும் எழுத்தில் தருவாயின் இதன் அளவு பெரிதாகிவிடும்.இதனால் எமது ஊரின் இழுவைப் படகை இத்துடன் நிறுத்துகின்றேன். மீண்டும் ஒரு தகவலினூடாக தங்களிடம் வருவேன்.

எமது ஊர் மக்கள் காலத்திற்கு காலம் பல்வேறு இடங்களிலும் சென்று மீன் பிடிப்பது வழக்கம். செல்லுமிடமெல்லாம் தங்களுக்கென்று காணிகள் சொந்தமாக வேண்டிவிடுவார்கள். அப்படி காரைநகரில் கே.வி.ரி.¨எஸ்.ஆர், ஈ.வி.எம், கறுத்தராசன், பாலசிங்கம். என்னும் சிலருக்கும் வல்வெட்டித்துறை விஸ்ணுசுந்தரத்திற்கு சொந்தமான காணியில் இன்று பிரமாண்டமான ஒரு விடுதியை கடற் படையினர் அமைத்துள்ளனர்.அதன் படம் இணைக்கப்பட்டுள்ளது. யார் காணியில் யார் விடுதி கட்டுவது. தாங்காதய்யா உலகம்.

தகவலுக்கு உதவியது:- . கை.யோகரட்ணம்.
​
ஆக்கம்:- அன்ரன் ஞானப்பிரகாசம். ( றாஜ் )
இந்தப் பக்கம் hit counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    Picture

    என்னைப்பற்றி

    அன்ரன் றாஜ் ஞானப்பிரகாசம்
    மயிலிட்டி

    பதிவுகள்

    January 2023
    November 2021
    December 2014
    November 2014
    May 2014
    April 2014
    January 2014
    December 2013
    May 2013
    January 2013

    அன்ரன் றாஜ் பக்கத்தினை முகநூல் நட்புக்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!

    முழுப் பதிவுகள்

    All
    Myliddy 1964

நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர் web counter
© 2011-23 ourmyliddy.com