வேற்றுகிரகவாசிகள்
இங்கேயே இருந்திட
வேறெங்கோ தேடப்படுகிறார்கள்
அறிய அறிய பழக பழக
புதுமை மனிதர்கள்
திணறவைக்கிறார்கள்
இங்கேயே இருந்திட
வேறெங்கோ தேடப்படுகிறார்கள்
அறிய அறிய பழக பழக
புதுமை மனிதர்கள்
திணறவைக்கிறார்கள்
திகைப்பூட்டுகிரார்கள்
எண்ணங்கள் நம்பிக்கைகள்
வாழ்க்கை முறைகளால்
பலவேறு உலகங்களாய்
சிதறுண்டு சுற்றுகிறார்கள்
விஞ்ஞானமும் மெஞ்ஞானமும்
அறிந்திடாத
ஆழ்ந்தது புரிந்திடாத மனிதன்
இங்கேயே இருக்கிறான்
ஒருவர் அறியா ஒருவர்
இங்கேயே இருக்கின்றனர்
பூகோள ரீதியாக ஒன்றாய்
வாழ்வியல் ரீதியாக பலவாய்
ஒரு உலகினுள் பலஆயிரம்
உலகங்கள் சுழல்கின்றன
வேறுவேறாய் வேறுவேறாய்
வேற்றுகிரகவாசிகள்
வேறெங்குமில்லை
இங்கேயே இருக்கின்றனர்.
மயிலை ஐங்கரன்
எண்ணங்கள் நம்பிக்கைகள்
வாழ்க்கை முறைகளால்
பலவேறு உலகங்களாய்
சிதறுண்டு சுற்றுகிறார்கள்
விஞ்ஞானமும் மெஞ்ஞானமும்
அறிந்திடாத
ஆழ்ந்தது புரிந்திடாத மனிதன்
இங்கேயே இருக்கிறான்
ஒருவர் அறியா ஒருவர்
இங்கேயே இருக்கின்றனர்
பூகோள ரீதியாக ஒன்றாய்
வாழ்வியல் ரீதியாக பலவாய்
ஒரு உலகினுள் பலஆயிரம்
உலகங்கள் சுழல்கின்றன
வேறுவேறாய் வேறுவேறாய்
வேற்றுகிரகவாசிகள்
வேறெங்குமில்லை
இங்கேயே இருக்கின்றனர்.
மயிலை ஐங்கரன்