துன்புற்று மரிப்பற்கே இவ்வுலகில்
இன்புற்று அவதரித்தது இக்குழந்தை
பன்புற்று மனிதர்தாம் வாழ ஆண்டவர்
அன்புற்று அனுப்பியது இக்குழந்தை
அன்னைமரியின் கருவில் மடியில் அன்பில்
தவழ்ந்தது இக்குழந்தை
ஏழைகளுடன் ஏழையாய் எளிமையின் வடிவமாய்
வளர்ந்தது இக்குழந்தை
இன்புற்று அவதரித்தது இக்குழந்தை
பன்புற்று மனிதர்தாம் வாழ ஆண்டவர்
அன்புற்று அனுப்பியது இக்குழந்தை
அன்னைமரியின் கருவில் மடியில் அன்பில்
தவழ்ந்தது இக்குழந்தை
ஏழைகளுடன் ஏழையாய் எளிமையின் வடிவமாய்
வளர்ந்தது இக்குழந்தை
சத்தியத்தின் வழி நானே என
இடித்துரைத்தது இக்குழந்தை
என்னை நம்பியவன் வீழான் என
உரத்துரைத்தது இக்குழந்தை
ஆணி அடித்து மேனி பிளக்க
தவிதவித்தது இக்குழந்தை
கசை அடியில் தசை கிழிய
துடிதுடித்தது இக்குழந்தை
உலகபாவம் சுமந்து பாரசிலுவையில்
உயிர்பிரிந்தது குழந்தை
குருதியால் நிலம் நனைத்து புவியினை
பரிசுத்தமாகியது இக்குழந்தை
மூன்றாம் நாளே உயிரோடு எழுந்து தன்
தெய்வீகத்தை நிரூபித்தது இக்குழந்தை
மண்ணுலகம் மீண்டும் வருவேன் என்றே
விண்ணுலகம் திரும்பியது இக்குழந்தை.
மயிலை ஐங்கரன்
இடித்துரைத்தது இக்குழந்தை
என்னை நம்பியவன் வீழான் என
உரத்துரைத்தது இக்குழந்தை
ஆணி அடித்து மேனி பிளக்க
தவிதவித்தது இக்குழந்தை
கசை அடியில் தசை கிழிய
துடிதுடித்தது இக்குழந்தை
உலகபாவம் சுமந்து பாரசிலுவையில்
உயிர்பிரிந்தது குழந்தை
குருதியால் நிலம் நனைத்து புவியினை
பரிசுத்தமாகியது இக்குழந்தை
மூன்றாம் நாளே உயிரோடு எழுந்து தன்
தெய்வீகத்தை நிரூபித்தது இக்குழந்தை
மண்ணுலகம் மீண்டும் வருவேன் என்றே
விண்ணுலகம் திரும்பியது இக்குழந்தை.
மயிலை ஐங்கரன்