நானும் முயற்ச்சிக்கின்றேன்
செந்தமிழின் செழுமையில் பெற்ற குளிர் போக்க
பற்றியெரியும் பாரதியின் பாடல்களில் பதுங்கியிருக்கிறேன்.
கல்கியில் மூழ்கி கண்ணதாசனில் மூர்ச்சையாகி
கம்பனை ப(பி)டித்து கரைசேர்ந்திருக்கிறேன்.

காலையில் ஏழ்மையும் மதியம் பட்டினியும்
இரவில் பசியையும் உண்டு மயங்கியிருக்கிறேன்.
நின்மதி என்பது சூரியஒளி போன்றதென்றும்- அது
ஓலைக்குடிசைகளுக்குள் இலகுவில் ஊடுருவுமெனவும்
மாளிகைகளின்மேல் பட்டு தெறித்துவிடுமெனவும் பார்த்திருக்கிறேன்.
காதலாலும் காதலிலும் தனித்து தவித்திருக்கேன் - அந்த
ஆழ்கடலில் மூழ்கி சிரிக்கும் தங்கமீனினையும் பிடித்திருக்கிறேன்.
இசையில் இழந்த எனை இயற்கையில் மீட்டிருக்கிறேன்.
தனிமனித ஒழுக்ககத்தையும் பலநூறு கதைகளையும்
தந்தையிடமிருந்து கற்றிருக்கிறேன்.
வார்த்தைகளை வைத்து வித்தை காட்டும் சூத்திரத்தையும்
சற்றே அறிந்துருக்கிறேன்.
அனுபவங்களை அணு அணுவாக
அனுபவப்பிபவர்கள் கவிஞர்கள் ஆகிறார்கள்.
நானும் முயற்ச்சிக்கின்றேன்.
மயிலை ஐங்கரன்