உன்னால் முடியும்
உன்னை
உணர்ந்துகொள்
உயர்ந்துசெல்
சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போது
விழி பிதுங்கிப்போவாய்
என்னால் ஆகாதென
ஓரமாக ஒதுங்கிப்போவாய்
முடியவே முடியாதென
பௌவியமாய் பதுங்கிப்போவாய்
உன்னை
உணர்ந்துகொள்
உயர்ந்துசெல்
சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போது
விழி பிதுங்கிப்போவாய்
என்னால் ஆகாதென
ஓரமாக ஒதுங்கிப்போவாய்
முடியவே முடியாதென
பௌவியமாய் பதுங்கிப்போவாய்
பெரும் மலையென நீ
மலைத்து நிற்பதை
சிறு குன்றென ஒருவர்
கடந்து செல்கிறார்
வெறும் கல்லென ஒருவர்
மிதித்து செல்கிறார்
விழித்துக்கொள்!!!
சாதிப்பவர்கள் விண்ணிலிருந்து
வீழ்ந்தவரில்லை
உன்னைபோல் மண்ணிலிருந்து
எழுந்தவர்களே
கரும் பாறைக்குள்ளேயே
தங்கம் உண்டு
சின்னஞ்சிறு விதையினுள்ளேயே
விருட்சம் உண்டு
அறிந்துகொள் உனக்குள்ளேயே
ஒளி உண்டு
புரிந்துவிட்டால் வெற்றிக்கு
வழி உண்டு
நம்பிக்கை வைத்துவிடு உன்மீது
சாதனைகள் படைத்துவிடு மண்மீது
உணர்ந்தால் உன்னாலும் முடியும்
இவ்வுலகில் உன்வாழ்வும் விடியும்
மயிலை ஐங்கரன்
மலைத்து நிற்பதை
சிறு குன்றென ஒருவர்
கடந்து செல்கிறார்
வெறும் கல்லென ஒருவர்
மிதித்து செல்கிறார்
விழித்துக்கொள்!!!
சாதிப்பவர்கள் விண்ணிலிருந்து
வீழ்ந்தவரில்லை
உன்னைபோல் மண்ணிலிருந்து
எழுந்தவர்களே
கரும் பாறைக்குள்ளேயே
தங்கம் உண்டு
சின்னஞ்சிறு விதையினுள்ளேயே
விருட்சம் உண்டு
அறிந்துகொள் உனக்குள்ளேயே
ஒளி உண்டு
புரிந்துவிட்டால் வெற்றிக்கு
வழி உண்டு
நம்பிக்கை வைத்துவிடு உன்மீது
சாதனைகள் படைத்துவிடு மண்மீது
உணர்ந்தால் உன்னாலும் முடியும்
இவ்வுலகில் உன்வாழ்வும் விடியும்
மயிலை ஐங்கரன்