இரத்த உறவுகளை
இங்கும் அங்குமாய்
இனச்சண்டை பிரித்தனவோ!
இதனால் அவதியுற்ற
இலங்கை தமிழர்கள்
இன்னல்பட நேர்ந்தனவோ!
இதுதான் விதியென்றும்
இப்படித்தான் நடக்குமென்றும்
இவர்கள் நினைத்ததில்லையே!
இங்கும் அங்குமாய்
இனச்சண்டை பிரித்தனவோ!
இதனால் அவதியுற்ற
இலங்கை தமிழர்கள்
இன்னல்பட நேர்ந்தனவோ!
இதுதான் விதியென்றும்
இப்படித்தான் நடக்குமென்றும்
இவர்கள் நினைத்ததில்லையே!
இந்தியாவென்றும் கனடாவென்றும்
இங்கிலாந்தென்றும் பிரான்சென்றும்
இத்தாலிக்கும் பறந்தனரே!
இப்படி ஆகத்தான்
இதர நாடுகளுக்கும்
இயன்றவர்கள் சென்றனரே!
இந்த மாற்றத்தை
இறைவன் தந்தானென
இவர்களும் நம்பினரே!
இடையில் சிலவருடம்
இணனயங்கள் இல்லாமல்
இவர்கள் தவித்தனரே!
இன்று தொடர்பெடுத்து
இணனயங்கள் வழியாக
இணனய தொடங்கினரே1
கூடியிருந்து வாழும்போது
கூத்தடித்து வாழ்ந்தவரை----அந்த
கூத்தன் பிரித்தானோ!
அன்பைபொழிந்த அம்மாவையும்
அறிவைவளர்த்த அப்பாவையும்
அப்படியே மறந்ததுஏன்?
அண்ணன் தம்பி பாசத்தையும்
அக்கா தங்கை நேசத்தையும்
அறவே இழந்ததுமேன்?
இடமாறி போனபின்பு
இதயத்தில் இப்போது
இரத்தபாசம் குறைந்ததுமேன்?
இதயங்கள் இப்போது
இயற்கைக்கு மாறாக
இயன்றவரை நடிப்பதுவேன்?
இல்லாளும் நடிக்கின்றாள்
இனியஉறவும் நடிக்கின்றதே----இது
இறைவனின் விளையாட்டோ!----இதில்
நல்லவர்கள் எவரென்றும்
நாணயம் எங்கேயென்றும்
நாமறிய வழியெதுவோ!----அன்று
கற்று அறியுமுன்னே
காதலை(அன்பை) உணர்ந்தவர்கள்
கானகத்தில் வாழ்வதுமேன்?-----இன்று
நன்கு படித்தவர்கள்
நாவின்மை தானிழந்து
நடிப்பது கலிகாலமோ!
ஏணியாய் இருந்தவரை
எட்டி உதைப்பதற்கு
ஏட்டினிலே படித்தனரோ!
ஏனிந்த அவலநிலை
ஏனிந்த துயரநிலை
என்பதைநான் அறிவதற்கு!
ஏனென்ற கேள்வியினை
என்னிடத்தில் நான்கேட்டு
எழுப்பிய கேள்வியினை!----இன்று
என்னுடன் நீங்களும்
எண்ண வேண்டுமென்று
எழுதினேன் மனம்திறந்து.
மயிலை துரை
இங்கிலாந்தென்றும் பிரான்சென்றும்
இத்தாலிக்கும் பறந்தனரே!
இப்படி ஆகத்தான்
இதர நாடுகளுக்கும்
இயன்றவர்கள் சென்றனரே!
இந்த மாற்றத்தை
இறைவன் தந்தானென
இவர்களும் நம்பினரே!
இடையில் சிலவருடம்
இணனயங்கள் இல்லாமல்
இவர்கள் தவித்தனரே!
இன்று தொடர்பெடுத்து
இணனயங்கள் வழியாக
இணனய தொடங்கினரே1
கூடியிருந்து வாழும்போது
கூத்தடித்து வாழ்ந்தவரை----அந்த
கூத்தன் பிரித்தானோ!
அன்பைபொழிந்த அம்மாவையும்
அறிவைவளர்த்த அப்பாவையும்
அப்படியே மறந்ததுஏன்?
அண்ணன் தம்பி பாசத்தையும்
அக்கா தங்கை நேசத்தையும்
அறவே இழந்ததுமேன்?
இடமாறி போனபின்பு
இதயத்தில் இப்போது
இரத்தபாசம் குறைந்ததுமேன்?
இதயங்கள் இப்போது
இயற்கைக்கு மாறாக
இயன்றவரை நடிப்பதுவேன்?
இல்லாளும் நடிக்கின்றாள்
இனியஉறவும் நடிக்கின்றதே----இது
இறைவனின் விளையாட்டோ!----இதில்
நல்லவர்கள் எவரென்றும்
நாணயம் எங்கேயென்றும்
நாமறிய வழியெதுவோ!----அன்று
கற்று அறியுமுன்னே
காதலை(அன்பை) உணர்ந்தவர்கள்
கானகத்தில் வாழ்வதுமேன்?-----இன்று
நன்கு படித்தவர்கள்
நாவின்மை தானிழந்து
நடிப்பது கலிகாலமோ!
ஏணியாய் இருந்தவரை
எட்டி உதைப்பதற்கு
ஏட்டினிலே படித்தனரோ!
ஏனிந்த அவலநிலை
ஏனிந்த துயரநிலை
என்பதைநான் அறிவதற்கு!
ஏனென்ற கேள்வியினை
என்னிடத்தில் நான்கேட்டு
எழுப்பிய கேள்வியினை!----இன்று
என்னுடன் நீங்களும்
எண்ண வேண்டுமென்று
எழுதினேன் மனம்திறந்து.
மயிலை துரை
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.