(அ ஆ)
அக்குளான் வைத்தியசாலை-----எனக்கு
ஆயுள்தந்த கோவிலது----அங்கு
அன்பான தாதியர்கள்
ஆணவமில்லா வைத்தியர்கள்
அனுசரணை வார்த்தைகள்
ஆழமான உபசரிப்பு-----எந்தன்
அக்குளான் வைத்தியசாலை-----எனக்கு
ஆயுள்தந்த கோவிலது----அங்கு
அன்பான தாதியர்கள்
ஆணவமில்லா வைத்தியர்கள்
அனுசரணை வார்த்தைகள்
ஆழமான உபசரிப்பு-----எந்தன்
(இ ஈ)
இதயத்தில் கோளாறு----எனை
ஈர்த்தனர் வரச்சொல்லி
இறையருள் தானிதுவோ!----எனை
ஈன்றவர் போல்பார்த்தார்
இப்படிநான் பார்த்ததில்லை-----இவர்களின்
ஈரமான மனசுகளை
(உஊ)
உண்மைக்கு எடுத்துக்காட்டாய்
ஊர்போற்ற வாழ்பவர்கள்
உத்தமர்கள் இவர்கள்தான்
ஊழல் அறியாதவர்கள்
உள்ளதை உள்ளபடி
ஊதுவது என்கடமை
(எஏ)
எதனாலே இதயத்தில்
ஏன்வந்தது கோளாறு
என்பதை எண்ணியெண்ணி
ஏக்கமுடன் இருந்தபோது
எப்படியோ எந்தனுக்கு
ஏற்பட்டது இவ்வதிஷ்டம்
(ஐ)
ஐயமுற்று இருந்தெனக்கு
ஐயாநீ கலங்காதே!
ஐயுறவும் தேவையில்லை----அந்த
ஐயன் முருகன்போல்
ஐந்துபேர் துணையிருந்து-----நல்ல
ஐடியாவும் தந்திருந்தார்----நான்
(ஒஓ)
ஒத்தையிலே வாழ்வதினால்
ஓரளவு நிம்மதிதான்
ஒருசில ஆண்டுகளாய்----நான்
ஓய்வெடுத்து வாழுகின்றேன்----இந்த
ஒருஆண்டு முடிந்துவிட்டால்----எனக்கு
ஓய்வூதியம் கிடைத்திடுமே!
மயிலை துரை
இதயத்தில் கோளாறு----எனை
ஈர்த்தனர் வரச்சொல்லி
இறையருள் தானிதுவோ!----எனை
ஈன்றவர் போல்பார்த்தார்
இப்படிநான் பார்த்ததில்லை-----இவர்களின்
ஈரமான மனசுகளை
(உஊ)
உண்மைக்கு எடுத்துக்காட்டாய்
ஊர்போற்ற வாழ்பவர்கள்
உத்தமர்கள் இவர்கள்தான்
ஊழல் அறியாதவர்கள்
உள்ளதை உள்ளபடி
ஊதுவது என்கடமை
(எஏ)
எதனாலே இதயத்தில்
ஏன்வந்தது கோளாறு
என்பதை எண்ணியெண்ணி
ஏக்கமுடன் இருந்தபோது
எப்படியோ எந்தனுக்கு
ஏற்பட்டது இவ்வதிஷ்டம்
(ஐ)
ஐயமுற்று இருந்தெனக்கு
ஐயாநீ கலங்காதே!
ஐயுறவும் தேவையில்லை----அந்த
ஐயன் முருகன்போல்
ஐந்துபேர் துணையிருந்து-----நல்ல
ஐடியாவும் தந்திருந்தார்----நான்
(ஒஓ)
ஒத்தையிலே வாழ்வதினால்
ஓரளவு நிம்மதிதான்
ஒருசில ஆண்டுகளாய்----நான்
ஓய்வெடுத்து வாழுகின்றேன்----இந்த
ஒருஆண்டு முடிந்துவிட்டால்----எனக்கு
ஓய்வூதியம் கிடைத்திடுமே!
மயிலை துரை
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.