அன்று
சாதிகளை பேசிப்பேசி
வறட்டு கெளரவமாய்
வாழ்ந்திருந்த முன்னோரெல்லாம்
பிஞ்சு மனங்களிலே
நஞ்சை கலந்ததினால்
ஒவ்வொரு மனங்களிலும்
வேரூன்றி வளர்ந்தயந்த
சாதி வெறியினாலே
இதயங்களை அழுக்காக்கி
அன்புகளை தொலைத்துவிட்டு------பல
இன்பங்களை இழந்துவிட்டு
இன்னல்களை தாங்கி
இளைஞர் யுவதியெல்லாம்
தவிப்போடு வாழ்ந்தது
அதுவும் ஒருகாலம்
சாதிகளை பேசிப்பேசி
வறட்டு கெளரவமாய்
வாழ்ந்திருந்த முன்னோரெல்லாம்
பிஞ்சு மனங்களிலே
நஞ்சை கலந்ததினால்
ஒவ்வொரு மனங்களிலும்
வேரூன்றி வளர்ந்தயந்த
சாதி வெறியினாலே
இதயங்களை அழுக்காக்கி
அன்புகளை தொலைத்துவிட்டு------பல
இன்பங்களை இழந்துவிட்டு
இன்னல்களை தாங்கி
இளைஞர் யுவதியெல்லாம்
தவிப்போடு வாழ்ந்தது
அதுவும் ஒருகாலம்
அந்த
முண்டாசு கவிஞனான
பாரதியார் பாடியது
சாதிகள் இல்லையடி
பாப்பா என்றுதான்----அந்த
பிஞ்சு மனங்களிலே
வேரூன்றி தழைக்கவைத்தார்
அவர்கூற்றை மெய்யாக்கி
அக்கனவை நினைவாக்கி
ஈழத்தில் இயக்கங்கள்
சாதிவெறியை வேரறுத்து
சமத்துவத்தை தழைக்கவைத்து
ஒன்றாய் பகிர்ந்துண்டு
ஒற்றுமையாய் வாழ்வதற்கு
புரட்சிகரமாய் வழிவகுத்த
இயக்கங்களை வாழ்தினாலும்----அந்த
இயக்கங்கள் இணனயாததினால்
இழந்துவிட்டது ஏராளம்
இதுவும் ஒருகாலம்
இன்று
சாதிகள் ஒழிந்ததடி
சமத்துவங்கள் நிலைத்ததடி
கடல்களை கடப்பதினால்
கஷ்டங்கள் மறையுதடி
நெடுந்தூர பயணத்தினால்
வாழ்க்கைகள் நிலைக்குதடி-----பல
இதயங்கள் இணைவதினால்
இன்பங்கள் பெருகுதடி----ஆனால்
ஒற்றுமையை இழந்ததினால்
ஈழக்கனவு அழிந்ததடி
எதிர்காலத்தை தொலைத்ததும்
இதுவும் ஒருகாலம்
மயிலை துரை
முண்டாசு கவிஞனான
பாரதியார் பாடியது
சாதிகள் இல்லையடி
பாப்பா என்றுதான்----அந்த
பிஞ்சு மனங்களிலே
வேரூன்றி தழைக்கவைத்தார்
அவர்கூற்றை மெய்யாக்கி
அக்கனவை நினைவாக்கி
ஈழத்தில் இயக்கங்கள்
சாதிவெறியை வேரறுத்து
சமத்துவத்தை தழைக்கவைத்து
ஒன்றாய் பகிர்ந்துண்டு
ஒற்றுமையாய் வாழ்வதற்கு
புரட்சிகரமாய் வழிவகுத்த
இயக்கங்களை வாழ்தினாலும்----அந்த
இயக்கங்கள் இணனயாததினால்
இழந்துவிட்டது ஏராளம்
இதுவும் ஒருகாலம்
இன்று
சாதிகள் ஒழிந்ததடி
சமத்துவங்கள் நிலைத்ததடி
கடல்களை கடப்பதினால்
கஷ்டங்கள் மறையுதடி
நெடுந்தூர பயணத்தினால்
வாழ்க்கைகள் நிலைக்குதடி-----பல
இதயங்கள் இணைவதினால்
இன்பங்கள் பெருகுதடி----ஆனால்
ஒற்றுமையை இழந்ததினால்
ஈழக்கனவு அழிந்ததடி
எதிர்காலத்தை தொலைத்ததும்
இதுவும் ஒருகாலம்
மயிலை துரை