பலவித கனவுகளை மனதில்கொண்டு
கருவறையில் என்னைநீ சுமந்திருந்தாய்
கனவுகளை நிறைவேற்றி தருவானென்று
ஆசையுடன் என்னைநீ பெற்றெடுத்தாய்
அப்படி ஆசையுடன் பெற்றமகன்
அனாதையாய் இங்கு வாழ்கின்றான்
கருவறையில் என்னைநீ சுமந்திருந்தாய்
கனவுகளை நிறைவேற்றி தருவானென்று
ஆசையுடன் என்னைநீ பெற்றெடுத்தாய்
அப்படி ஆசையுடன் பெற்றமகன்
அனாதையாய் இங்கு வாழ்கின்றான்
கஷ்டங்கள் மத்தியிலே நீவாடி
ஈன்றபோது விதியுடனே போராடி
நோய்வந்தால் மருத்துவரிடம் நீயோடி
பலதடவை காலனிடம் வாதாடி
நெஞ்சினிலே அணைத்து வளர்த்தமகன்
நெஞ்சுருகி இங்கே தவிக்கின்றான்.....
பாலூட்டி தாலாட்டி சீராட்டி
பாசத்துடன் நீ எனக்கு உணவூட்டி
பார்புகழ வாழ்வாயென பாராட்டி
அறநெறி சொல்லித்தந்து நேர்காட்டி
அப்படி அன்புடன் வளர்த்தமகன்
ஆதரவு இல்லாமல் வாழ்கின்றான்.....
நடப்பதற்கு நடைவண்டி வாங்கித்தந்தாய்
விளையாட பொம்மைகளை எடுத்துத்தந்தாய்
உறங்கவும் உன்மடியில் இடம் கொடுத்தாய்
ஓடி விளையாடவும் உதவி செய்தாய்
அவ்விதம் செல்லமாய் வளர்த்தமகன்
ஊணுறக்கம் இழந்து தவிக்கின்றான்.....
பள்ளிக்கு சீருடையை அணிவித்து
கல்வியினை கற்பதற்கு வழிசெய்தாய்
நல்லநல்ல கதைகள் சொல்லித்தந்து
பொதுஅறிவை என்மனதில் புகட்டிவிட்டு
வாழ்வதற்கு வழியொன்றும் சொல்லாமல்
வற்புறுத்தி என்னை நீ அனுப்பிவைத்தாய்.....
பத்துமாதம் நீ சுமந்த வேதனையை
என் முகத்தைப் பார்த்தவுடன் மறந்தேனென்றாய்
வளர்த்தபோது நீபட்ட கஷ்டங்களை----நான்
தவளுமழகை பார்த்தவுடன் மறந்தேனென்றாய்
உன்னைவிட்டு நான் பிரிந்த வேதனையை
எப்படித்தான் உன்மனதால் தாங்கிக்கொண்டாய்.....
எங்கள் நாட்டில் இனச்சண்டை வந்ததினால்
இராணுவம் இளைஞர்களை கொன்றதினால்
என்னுயிரை காப்பாற்ற நீ துடித்த
துடிப்பெல்லாம் நானுணர்ந்து கொண்டாலும்
உன்னைவிட்டு நான்பிரிந்த வேதனையை
நான்மறக்க முடியாமல் துடிக்கின்றேன்.....
அப்பாவின் சுமைகளுக்கு தோள்கொடுப்பான்
தம்பிதங்கை நலன்களை பார்த்துக்கொள்வான்
அக்காவை கரைசேர்க்க உதவிடுவான்
வயதான காலங்களில் எங்களுக்கு
உறுதுணையாய் என்னருகில் இருந்திடுவான்
என்றுநீ எண்ணியது வீணம்மா!.....
ஈன்றபோது விதியுடனே போராடி
நோய்வந்தால் மருத்துவரிடம் நீயோடி
பலதடவை காலனிடம் வாதாடி
நெஞ்சினிலே அணைத்து வளர்த்தமகன்
நெஞ்சுருகி இங்கே தவிக்கின்றான்.....
பாலூட்டி தாலாட்டி சீராட்டி
பாசத்துடன் நீ எனக்கு உணவூட்டி
பார்புகழ வாழ்வாயென பாராட்டி
அறநெறி சொல்லித்தந்து நேர்காட்டி
அப்படி அன்புடன் வளர்த்தமகன்
ஆதரவு இல்லாமல் வாழ்கின்றான்.....
நடப்பதற்கு நடைவண்டி வாங்கித்தந்தாய்
விளையாட பொம்மைகளை எடுத்துத்தந்தாய்
உறங்கவும் உன்மடியில் இடம் கொடுத்தாய்
ஓடி விளையாடவும் உதவி செய்தாய்
அவ்விதம் செல்லமாய் வளர்த்தமகன்
ஊணுறக்கம் இழந்து தவிக்கின்றான்.....
பள்ளிக்கு சீருடையை அணிவித்து
கல்வியினை கற்பதற்கு வழிசெய்தாய்
நல்லநல்ல கதைகள் சொல்லித்தந்து
பொதுஅறிவை என்மனதில் புகட்டிவிட்டு
வாழ்வதற்கு வழியொன்றும் சொல்லாமல்
வற்புறுத்தி என்னை நீ அனுப்பிவைத்தாய்.....
பத்துமாதம் நீ சுமந்த வேதனையை
என் முகத்தைப் பார்த்தவுடன் மறந்தேனென்றாய்
வளர்த்தபோது நீபட்ட கஷ்டங்களை----நான்
தவளுமழகை பார்த்தவுடன் மறந்தேனென்றாய்
உன்னைவிட்டு நான் பிரிந்த வேதனையை
எப்படித்தான் உன்மனதால் தாங்கிக்கொண்டாய்.....
எங்கள் நாட்டில் இனச்சண்டை வந்ததினால்
இராணுவம் இளைஞர்களை கொன்றதினால்
என்னுயிரை காப்பாற்ற நீ துடித்த
துடிப்பெல்லாம் நானுணர்ந்து கொண்டாலும்
உன்னைவிட்டு நான்பிரிந்த வேதனையை
நான்மறக்க முடியாமல் துடிக்கின்றேன்.....
அப்பாவின் சுமைகளுக்கு தோள்கொடுப்பான்
தம்பிதங்கை நலன்களை பார்த்துக்கொள்வான்
அக்காவை கரைசேர்க்க உதவிடுவான்
வயதான காலங்களில் எங்களுக்கு
உறுதுணையாய் என்னருகில் இருந்திடுவான்
என்றுநீ எண்ணியது வீணம்மா!.....
போவதற்கு வழியொன்றும் தெரியாமல்
சிறைக்குள்ளே வந்துநான் மாட்டிக்கொண்டேன்
அழுகைதான் தினந்தோறும் என்னிடத்தில்
அழைக்காமல் அடிக்கடி வந்துபோகும்
புன்னகையை நான்பார்த்து பலநாளாச்சு
அது இங்கே ஒருநாளும் வந்ததில்லை.....
அன்றுநான் உன்னிடத்தில் பார்த்ததுதான்
கடைசியாக நான்கண்ட புன்னகையே
அழுகையுடன் நானிங்கே வாழுகின்றேன்
ஆறுதல் சொல்வதற்கு நீயுமில்லை
அமைதில்லா வாழ்வினை எனக்கழித்த---அந்த
ஆண்டவனும் நல்லவன் இல்லையம்மா!
எந்தஇடத்தில் இப்போது இருக்கின்றாய்
எப்படிநீ இப்போது வாழ்கின்றாய்
என்பதை நானறிய ஆவலுண்டு---இங்கு
தொலைபேசி வசதிகூட இல்லையம்மா
அந்தவசதி இங்கவர்கள் செய்யவில்லை
கைபேசி வைத்திருந்தால் பறித்திடுவார்.....
உங்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை
செய்யமுடிய வில்லையென்று ஏங்குகின்றேன்
பெற்றகடன் செய்வதற்கு வழியில்லையே!
என்பதை எண்ணியெண்ணி துடிக்கின்றேன்
நான்செய்த இப்பிறவி பாபம்தானோ?
இங்குநான் அனுபவிக்கும் தண்டனைகள்.....
அடுத்ததொரு பிறவியொன்று இருக்குமானால்
மறுபடியும் உன்வயிற்றில் பிறந்துவந்து
விட்டுப்போன கடமைகளை செய்வதற்கு
என்மனதில் எண்ணங்கள் இருந்தாலும்
சந்தர்ப்பத்தை எனக்களிக்க விருப்பமில்லா---அந்த
இறைவனும் இரக்கமில்லா இரணியனே.....
சுமக்கமுடிந்த சுமைகளை என்னிடம்தா
முடியாத சுமைகளை நீவைத்துக்கொள்
என்றுநான் பலதடவை கடவுளிடம் இரக்கமுடன்
பிராத்தனை பண்ணிவிட்டேன்---அந்த
இறைவனும் மனமிரங்க வில்லையம்மா!
எனக்கொரு நல்வழியும் காட்டவில்லை.....
இதற்குமேல் சுமைகளை நான்சுமக்க
உறுதியான மனமெனக்கு இல்லையம்மா!---என்
இறப்பில்தான் நிம்மதி கிடைக்குமென்றால்---அந்த
இறப்பையும் சந்திக்க சம்மதமே!
வாழ்விருந்தால் உன்னைவந்து பார்ப்பேனம்மா!---நான்
மடிந்துவிட்டால் தகவல்கூற முடியாதம்மா!
மயிலை துரை
சிறைக்குள்ளே வந்துநான் மாட்டிக்கொண்டேன்
அழுகைதான் தினந்தோறும் என்னிடத்தில்
அழைக்காமல் அடிக்கடி வந்துபோகும்
புன்னகையை நான்பார்த்து பலநாளாச்சு
அது இங்கே ஒருநாளும் வந்ததில்லை.....
அன்றுநான் உன்னிடத்தில் பார்த்ததுதான்
கடைசியாக நான்கண்ட புன்னகையே
அழுகையுடன் நானிங்கே வாழுகின்றேன்
ஆறுதல் சொல்வதற்கு நீயுமில்லை
அமைதில்லா வாழ்வினை எனக்கழித்த---அந்த
ஆண்டவனும் நல்லவன் இல்லையம்மா!
எந்தஇடத்தில் இப்போது இருக்கின்றாய்
எப்படிநீ இப்போது வாழ்கின்றாய்
என்பதை நானறிய ஆவலுண்டு---இங்கு
தொலைபேசி வசதிகூட இல்லையம்மா
அந்தவசதி இங்கவர்கள் செய்யவில்லை
கைபேசி வைத்திருந்தால் பறித்திடுவார்.....
உங்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை
செய்யமுடிய வில்லையென்று ஏங்குகின்றேன்
பெற்றகடன் செய்வதற்கு வழியில்லையே!
என்பதை எண்ணியெண்ணி துடிக்கின்றேன்
நான்செய்த இப்பிறவி பாபம்தானோ?
இங்குநான் அனுபவிக்கும் தண்டனைகள்.....
அடுத்ததொரு பிறவியொன்று இருக்குமானால்
மறுபடியும் உன்வயிற்றில் பிறந்துவந்து
விட்டுப்போன கடமைகளை செய்வதற்கு
என்மனதில் எண்ணங்கள் இருந்தாலும்
சந்தர்ப்பத்தை எனக்களிக்க விருப்பமில்லா---அந்த
இறைவனும் இரக்கமில்லா இரணியனே.....
சுமக்கமுடிந்த சுமைகளை என்னிடம்தா
முடியாத சுமைகளை நீவைத்துக்கொள்
என்றுநான் பலதடவை கடவுளிடம் இரக்கமுடன்
பிராத்தனை பண்ணிவிட்டேன்---அந்த
இறைவனும் மனமிரங்க வில்லையம்மா!
எனக்கொரு நல்வழியும் காட்டவில்லை.....
இதற்குமேல் சுமைகளை நான்சுமக்க
உறுதியான மனமெனக்கு இல்லையம்மா!---என்
இறப்பில்தான் நிம்மதி கிடைக்குமென்றால்---அந்த
இறப்பையும் சந்திக்க சம்மதமே!
வாழ்விருந்தால் உன்னைவந்து பார்ப்பேனம்மா!---நான்
மடிந்துவிட்டால் தகவல்கூற முடியாதம்மா!
மயிலை துரை