போற்றுதலுக்குரிய எனது கலைமகள் மகா வித்தியாலயத்திற்கும், எங்கள் ஆசிரிய பெருந்தகைகளுக்கும், எம்மையும் பாடசாலையையும் வளர்த்தெடுத்த பெற்றோருக்கும், சக மாணவி மாணவ நண்பர்களுக்கும் பழைய நினைவுகளுடன் உங்களில் ஒருவனான அருண்குமாரின் வணக்கம்.
இங்கு மயிலிட்டி வடக்கு அமெரிக்க மிசன் பாடசாலையாக 1974 இலும் மற்றும் மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயமாக 1982 ஆகிய காலகட்டங்களிலும் வெளிவந்த பாரதி சிறப்பு மலரின் உதவியுடன் எண்ண அலைகளில் அடித்துச் செல்லப்படப் போகின்றோம்.
முதலாவதாக நான்கு தசாப்தங்கள் பின்னோக்கிச் சென்று 80 களின் பாடசாலை நினைவுகளை பாரதியில் பதிந்திருக்கும் படங்களுடன் எனக்குத் தெரிந்தவற்றையும் சேர்த்து எழுதி உங்களுடன் நானும் பயணிக்க இருக்கின்றேன், பகுதி பகுதியாக உங்கள் ஆதரவுடன்.
இங்கு மயிலிட்டி வடக்கு அமெரிக்க மிசன் பாடசாலையாக 1974 இலும் மற்றும் மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயமாக 1982 ஆகிய காலகட்டங்களிலும் வெளிவந்த பாரதி சிறப்பு மலரின் உதவியுடன் எண்ண அலைகளில் அடித்துச் செல்லப்படப் போகின்றோம்.
முதலாவதாக நான்கு தசாப்தங்கள் பின்னோக்கிச் சென்று 80 களின் பாடசாலை நினைவுகளை பாரதியில் பதிந்திருக்கும் படங்களுடன் எனக்குத் தெரிந்தவற்றையும் சேர்த்து எழுதி உங்களுடன் நானும் பயணிக்க இருக்கின்றேன், பகுதி பகுதியாக உங்கள் ஆதரவுடன்.
- முதலாவதாக 1982ல் பதிந்திருக்கும் ஆசிரியர் குடும்பத்தினை பார்ப்போம்
முன் வரிசையில் இருப்பவர்கள் இடமிருந்து வலமாக:
திருமதி ம. குணரத்தினம்
|
(குணரத்தினம் ரீச்சர்)
|
செல்வி பு. அப்பாப்பிள்ளை
|
(புவனேஸ்வரி ரீச்சர்)
|
திருமதி கி. தர்மதாசன்
|
(சமூகக்கல்வி)
|
திரு ஆ. நவரத்தினம்
|
(சங்கிலி நவரத்தினம் மாஸ்ரர், சிறந்த சைவ சமயப் பேச்சாளர்)
|
திரு சி. அப்புத்துரை
|
(அதிபர், பண்டிதர், என் தமிழ் ஆசான், சகலகலா வல்லவர்)
|
திரு வை. கணேசமூர்த்தி
|
(உப அதிபர், விஞ்ஞானம், சாந்தமானவர், வசீகரமானவர், தீர்க்கதரிசி, முற்போக்கு சிந்தனையாளர்)
|
திருமதி இ. அப்புத்துரை
|
(இரத்தினம் ரீச்சர் எங்களால் பாசத்துடன் அம்மா என அழைக்கப் பட்டவர்.)
|
திருமதி அ. தம்பையா
|
(தம்பையா ரீச்சர், அரிவரி ரீச்சர் எனவும் அழைப்போம்)
|
திருமதி அ. ஸ்ரீமகாதேன்
|
(மகாதேவன் ரீச்சர்)
|
இடை வரிசையில் நிற்பவர்கள் இடமிருந்து வலமாக:
திரு வை. மதியாபரணம்
|
(எங்களின் 3ம் வகுப்பு மாஸ்ரர், முதல் நாள் வகுப்பில் பா + O + பூ = ? என்னவென்று முதல் நாளில் கேட்ட கேள்வி இன்றும் மறக்கவில்லை.)
|
திருமதி சி. சின்னையா
|
(பன்ன ரீச்சர் - கைவினைப்பொருள், சித்திரம்)
|
திருமதி த. சிவபாலசுந்தரம்
|
|
திருமதி ஈ. துரைராசா
|
(ஈஸ்வரி ரீச்சர்)
|
செல்வி கு. இராசகுமாரி
|
(கணிதம், வர்த்தகம், உடற்பயிற்சி)
|
செல்வி மை. இலங்கைநாயகம்
|
(மைதிலி ரீச்சர் - விஞ்ஞானம், சுகாதாரக் கல்வி)
|
செல்வி சா. சின்னத்தம்பி
|
(சாரதா ரீச்சர், கணிதம்)
|
திருமதி யோ. இராசரத்தினம்
|
(யோகேஸ்வரி ரீச்சர், எனது முதலாம் வகுப்பு ரீச்சர்)
|
திரு தெ. சந்திரகுமாரன்
|
(ஆங்கிலம்)
|
கடை வரிசையில் நிற்பவர்கள் இடமிருந்து வலமாக:
திரு P.J.E. றொசைறோ
|
(ஆங்கிலம்)
|
திரு சி. நவரத்தினம்
|
(4ம் வகுப்பு ஆசிரியர்)
|
திரு து. விஜயரத்தினம்
|
|
திரு வே. தம்பிராசா
|
|
திரு. மு. நகுலேஸ்வரன்
|
(விவசாயம்)
|
திரு த. இராசரத்தினம்
|
(3ம், 4ம் வகுப்பு ஆசிரியர்)
|
திரு ஆ. ஞானசுந்தரம்
|
(4ம் வகுப்பு ஆசிரியர்)
|
திரு க. சின்னத்தம்பி
|
(4ம் வகுப்பு ஆசிரியர்)
|
திரு க. சபாநாதன்
|
(கணிதம் மற்றும் விளையாட்டுத்துறை)
|
தொடரும்.....
இத் தொடருக்கான உங்கள் கருத்துக்கள், உங்களுக்கு தெரிந்த விபரங்கள் எவையாயினும் கீழே பதிவு செய்யுங்கள் உறவுகளே!