பேராற்றல் சுமந்த
கொலை செய்யும் இயந்திரங்கள் ஊதிய
கந்தக தட்டைகள்
எம்மைத் துளைத்து
ஊனமாக்கின....
அப்போதெல்லாம்
மனிதர்கள் எங்கிருந்தனர்?
கொலை செய்யும் இயந்திரங்கள் ஊதிய
கந்தக தட்டைகள்
எம்மைத் துளைத்து
ஊனமாக்கின....
அப்போதெல்லாம்
மனிதர்கள் எங்கிருந்தனர்?
கைகள் இரண்டுமின்றி
தீட்டுச் சீலை மாற்றுவதின்
சிரமத்தை
இயந்திரங்கள் புரிந்திருக்க வாய்ப்பில்லை...
மனிதர்கள் புரிந்திருக்கலாமே...
கால்களின்றி
காலைக்கடன்களின்
அவசர அழைப்பை
எவ்வாறு ஏற்பதென்பது
இயந்திரங்கள் அறியாது...
மனிதர்கள் அறிவார்களே....
முப்பது வயது விதவையின்
மூச்சிலிருக்கும் வேதனை
இணையில்லாத் தனிமை
இயந்திரங்கள் உணராது..
மனிதர்கள் உணர்ந்திருக்கலாமே...
எமது இரப்பைகளை
கிழித்துண்ட
கந்தக உருண்டைகளை
விற்ற பணத்தில்
சர்வதேசம் விருந்துண்கிறது.
எஞ்சியிருப்போர்
நெஞ்சிலிருக்கும் நெருப்பு
தலைமுறை வழியாக
தலையெடுக்கும் நாளில்
உங்கள்
தலைக்கனங்கள் அறுபடும்....
- சங்கீதா தேன்கிளி
தீட்டுச் சீலை மாற்றுவதின்
சிரமத்தை
இயந்திரங்கள் புரிந்திருக்க வாய்ப்பில்லை...
மனிதர்கள் புரிந்திருக்கலாமே...
கால்களின்றி
காலைக்கடன்களின்
அவசர அழைப்பை
எவ்வாறு ஏற்பதென்பது
இயந்திரங்கள் அறியாது...
மனிதர்கள் அறிவார்களே....
முப்பது வயது விதவையின்
மூச்சிலிருக்கும் வேதனை
இணையில்லாத் தனிமை
இயந்திரங்கள் உணராது..
மனிதர்கள் உணர்ந்திருக்கலாமே...
எமது இரப்பைகளை
கிழித்துண்ட
கந்தக உருண்டைகளை
விற்ற பணத்தில்
சர்வதேசம் விருந்துண்கிறது.
எஞ்சியிருப்போர்
நெஞ்சிலிருக்கும் நெருப்பு
தலைமுறை வழியாக
தலையெடுக்கும் நாளில்
உங்கள்
தலைக்கனங்கள் அறுபடும்....
- சங்கீதா தேன்கிளி
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.