
கிட்டத்தட்ட 30 வருட தவத்தின் பின் எமது பூர்வீக காணிகளில் குடியேறும் பேறு பெற்றுள்ளோம். எமது காணிகள் எவ்வளவு சிறியதாக இருப்பினும் எமக்கு அவை பாரம்பரியமானவை. கடல், பயிர்செய் நிலத்துடன் கூடிய எமது வளமிகு காணிகளை மீளப்பெற்றதும் அவற்றின் தரத்தினைக் கூட்டி ஊரை மேம்படுத்துவதற்கான திட்டங்களையே நாம் முன் வைக்க வேண்டும். மாறாக அவற்றைக் கோடிகளுக்கு விற்றுவிட்டு எமது பரம்பரையை விட்டகல முயலக்கூடாது..