சிகரங்களின்மேலான ஈர்ப்பினால்
வண்ண கற்பனைகளின்
நூல் கயிற்றை பிடித்தவாறே
பெரும் பிரயர்தனதுடன்
தவிப்புடன் அல்லல்பட்டு
மலை உச்சிதனை அடைகிறவன்
மலைத்துப்போகிறான்
வண்ண கற்பனைகளின்
நூல் கயிற்றை பிடித்தவாறே
பெரும் பிரயர்தனதுடன்
தவிப்புடன் அல்லல்பட்டு
மலை உச்சிதனை அடைகிறவன்
மலைத்துப்போகிறான்
காணுமிடமெங்கும் அங்கே
நிசப்ததுடனான
பரந்துவிரிந்த சமவெளிகளே
வெறுமைகளால் நிரம்பி
வழிந்துகொண்டிருக்கிறது
ஏக்கத்துடனேயே
கடந்துவந்த பாதைதனில்
பார்வையை திருப்புகிறான்
புள்ளிமான் கூட்டங்களை
பூத்துகுலுங்கும் பூஞ்சோலைகளை
மண்நனைத்து மரம்நனைத்து
மனம்நனைத்தோடும்
ஆற்பரிக்கும் அருவிகளை
அனைத்துமே சிறு புள்ளியாய்
எட்டமுடியா உயரத்திலிவன்
ஒரு கணமேனும் அவற்றில் இன்புறாமல்
ஓடிய வேகத்தை எண்ணி கண் கலங்குகிறான்
அனைத்தையும் ஆழ்ந்து கன்னுற்றவன்
எல்லாவற்றையும்விட உயரத்திலேயே
நானிருக்கிறேனென தனைத்தானே
ஆசுவசுப்படுதிகொண்டவன்
மெதுவாக அமிழத்தொடங்குகிறான்
சூன்யமான வெறுமை வெளிகளுக்குள்.
~ஐங்கரன்~
நிசப்ததுடனான
பரந்துவிரிந்த சமவெளிகளே
வெறுமைகளால் நிரம்பி
வழிந்துகொண்டிருக்கிறது
ஏக்கத்துடனேயே
கடந்துவந்த பாதைதனில்
பார்வையை திருப்புகிறான்
புள்ளிமான் கூட்டங்களை
பூத்துகுலுங்கும் பூஞ்சோலைகளை
மண்நனைத்து மரம்நனைத்து
மனம்நனைத்தோடும்
ஆற்பரிக்கும் அருவிகளை
அனைத்துமே சிறு புள்ளியாய்
எட்டமுடியா உயரத்திலிவன்
ஒரு கணமேனும் அவற்றில் இன்புறாமல்
ஓடிய வேகத்தை எண்ணி கண் கலங்குகிறான்
அனைத்தையும் ஆழ்ந்து கன்னுற்றவன்
எல்லாவற்றையும்விட உயரத்திலேயே
நானிருக்கிறேனென தனைத்தானே
ஆசுவசுப்படுதிகொண்டவன்
மெதுவாக அமிழத்தொடங்குகிறான்
சூன்யமான வெறுமை வெளிகளுக்குள்.
~ஐங்கரன்~