உன் கண்கள் எனும் அண்டவெளியில் நான்
ஆராய்ச்சி நடத்திக் கற்றுக்கொண்டது மட்டும்தான் காதல்.......
உன் இதழோரம் கசிகின்ற ஈரம்பட்டு,
இழகிப்போனதடி உனைக்காணும் போதெல்லாம்
என் இரும்பு நெஞ்சம்.
ஆராய்ச்சி நடத்திக் கற்றுக்கொண்டது மட்டும்தான் காதல்.......
உன் இதழோரம் கசிகின்ற ஈரம்பட்டு,
இழகிப்போனதடி உனைக்காணும் போதெல்லாம்
என் இரும்பு நெஞ்சம்.
உலக வல்லரசுகளை எல்லாம் எதைவைத்து கணிக்கிறார்கள்,
அணு உலையே உன்கண்களில் இருக்கும்போது .......
காதல் இல்லையென்றால் காத்திருந்திருப்பேன்
காலம் கனியும்வரை ஆனால்
பணத்தை காரணம்காட்டி என் காதலை
உன்னுடன் வாங்கிச்சென்றவள் நீ..... இன்று
உன்னருகில் பணம். பணத்தருகில்
உன் நினைவுகளுக்கு மட்டும் தெரியும் பிணமாக நான் ..............
காதலிக்கும்போது இருந்த சந்தோஷத்தைவிட,
நிலைத்துநிற்கின்றது உனை பிரிந்ததனால் வந்த சோகம்......
நீ அழகாய் இருக்கிறாய் என்று
ஆயிரம் தடவை பொய் சொல்லத்தெரிந்த எனக்கு
திமிராய் இருக்கிறாய் என்று ஒரு தரமேனும்
உண்மை சொல்லத் தெரியவில்லை .......
காதலை சுமந்து வாழ்ந்தேன் அன்று எனக்காக
வலிகளை மட்டும் சுமக்கின்றேன் இன்று உனக்காக........
உங்களில் ஒருவன்
மதீஸ் (கெளதம்)