ஓவ்வொரு மனிதருக்கும் ஒரு நாடுண்டு------அந்த
மனிதரை நெறிப்படுத்த ஒரு மதமுண்டு
ஓவ்வொரு இனத்திற்கும் ஒரு மொழியுண்டு----அதில்
அவர்கள் பேச முழு உரிமையுண்டு
மனிதரை நெறிப்படுத்த ஒரு மதமுண்டு
ஓவ்வொரு இனத்திற்கும் ஒரு மொழியுண்டு----அதில்
அவர்கள் பேச முழு உரிமையுண்டு
ஒவ்வொரு மதத்தின் கொள்கைகளை
விளக்கி போதிக்க துறவிகளுண்டு-------அந்த
புனித மானதொரு பதவிகளை
துறவிகள் களங்க படுத்துகின்றார்
அரச பதவி வேண்டாமென்று
ஆன்மீகத்தை புத்தர் தேர்ந்தெடுத்தார்-------அதை
போதிக்க வந்த பிக்குகளோ
அரசியலில் நுழைய துடிக்கின்றார்
அடடா! கொடுமை இதுவல்லவோ!
ஆன்மீகத்திற்கு இது இழுக்கல்லவோ!-------இதை
பிக்குகள் மட்டும் செய்யவில்லை-----பல
மதத்தின் துறவிகளும் செய்கின்றார்
பிற உயிர்களை நேசியென்றும்
அறம் செய்வது சிறந்ததென்றும்
மனித நேயம்பற்றி விரிவாக
எடுத்து சொல்கின்றன மதநூல்கள்----இன்று
மதத்தையும் மொழியையும் திணிக்கின்றார்------நல்ல
மனிதரை மிருகமாய் ஆக்குகின்றார்
கூட்டை அவர்கள் கலைக்கின்றார்-----பின்
நாட்டை விட்டும் விரட்டுகின்றார்
உரிமையை இழந்த மனிதராலும்
உரிமையை மறுக்கும் மனிதராலும்
உண்டாகும் பகையே யுத்தமாகும்------இதை
உணராமல் போனால் அழிவேயாகும்
மயிலை துரை
விளக்கி போதிக்க துறவிகளுண்டு-------அந்த
புனித மானதொரு பதவிகளை
துறவிகள் களங்க படுத்துகின்றார்
அரச பதவி வேண்டாமென்று
ஆன்மீகத்தை புத்தர் தேர்ந்தெடுத்தார்-------அதை
போதிக்க வந்த பிக்குகளோ
அரசியலில் நுழைய துடிக்கின்றார்
அடடா! கொடுமை இதுவல்லவோ!
ஆன்மீகத்திற்கு இது இழுக்கல்லவோ!-------இதை
பிக்குகள் மட்டும் செய்யவில்லை-----பல
மதத்தின் துறவிகளும் செய்கின்றார்
பிற உயிர்களை நேசியென்றும்
அறம் செய்வது சிறந்ததென்றும்
மனித நேயம்பற்றி விரிவாக
எடுத்து சொல்கின்றன மதநூல்கள்----இன்று
மதத்தையும் மொழியையும் திணிக்கின்றார்------நல்ல
மனிதரை மிருகமாய் ஆக்குகின்றார்
கூட்டை அவர்கள் கலைக்கின்றார்-----பின்
நாட்டை விட்டும் விரட்டுகின்றார்
உரிமையை இழந்த மனிதராலும்
உரிமையை மறுக்கும் மனிதராலும்
உண்டாகும் பகையே யுத்தமாகும்------இதை
உணராமல் போனால் அழிவேயாகும்
மயிலை துரை