அமரர் கந்தசாமி தம்பி
(மாவீரர்)
வீரச்சாவு : 21 நவம்பர் 1990
அத்தை தந்த அத்தானே ஆண்டுகள் 25 ஓடியும் -உன் அன்பில் ஆடாமல் நிற்கிறோம். பிரிந்து போன உன்னை விட பிரியாத உன் நினைவுகள் தான் நிரந்தரம்.
(மாவீரர்)
வீரச்சாவு : 21 நவம்பர் 1990
அத்தை தந்த அத்தானே ஆண்டுகள் 25 ஓடியும் -உன் அன்பில் ஆடாமல் நிற்கிறோம். பிரிந்து போன உன்னை விட பிரியாத உன் நினைவுகள் தான் நிரந்தரம்.
அத்தான் என்ற அழகிய உறவுக்கு ஆணிவேரே நீ தானே. அழியாத தடயங்களை என்நெஞ்சில் விட்டுச்சென்றவனே . நகராத பொழுதுகளாய் உன்னுடன் நாம் வாழ்ந்த தருணங்கள். சிரித்திரன் முகத்துடன் சாவை தழுவியருப்பாய் சில கணமாவது நீ உன்னவளின் நினைவுடன் போட்டியிருப்பாய். சலவை செய்த உன் சிரிப்புக்கு சாவு மணிஅடிக்கவா நீ மீண்டும் தாய்மண்சென்றாய். எதிரிகள் உன்னை குறிவைக்க காரணம் உன் பெயரா? தமிழ்பற்றா? உன்னை இழந்ததாலோ உன்னவளையும் இழந்நுவுட்டோம். தாயின் கதறலும் தந்தையின் கண்ணீரும் உன்பிறந்தவர்களின் உயிரோலமும் தாய்மாமனின கனவுகளும் தன்னவளின் எதிர்காலமும் எங்களின் பாசமும் நண்பர்களின் அன்பையும் நீ விட்டுச்சென்று தம்பி என்ற பெயருக்கு தாய்மண்ணில் பெருமை சேர்த்தாய்.
மறக்கமுடியாத தருணங்களில் சில இனிமையான நாட்கள் . துள்ளி திரிந்து ஒரு காலம் . தூணில் கட்டி அடி வாங்கியது சில நாட்கள் . பச்சைமிளகாய் கடித்து bunismamt வாங்கி எல்லாபாடமும் 7dயும் 1cயும் வாங்கி தண்ணீர் bucket ல்கள்பதித்து விடிய விடிய பாடம்படித்து . நடுஇரவில் நீ தூக்கத்தில் கதைப்பதை நாங்கள் உன்னை சுற்றி இருந்து கேட்டு சிரித்து விடிந்ததும் மாமாவிடம் அடியும்வாங்கி . அழுதுகொண்டே நீ சொல்லுவாய் மாமி சாப்பாட்டை தாங்கோ அவர் மாமாதானே அடிக்கட்டும் என்று . கொழும்பில் வாழ்ந்த அந்த கொஞ்ச நாட்களில் எனக்கு எல்லா கவலைகளுக்கும் நீ தான்டா மருந்து . எத்தனை கதைகள் . என் மகனின் கையில் சாக்லேட்டுக்கள் அவனை கொண்டு ஒரு ஒவ்வொருநாளும் அந்த விவேகானந்த hils ல்நடை . அன்பாக இருந்தால் உன்னைப்போல் ஒரு அத்தான் போதுமடா. இந்த உலகத்தையும் எங்கள் காலடிக்கு கொண்டுவர.
அஞ்சலி இரவிசங்கர்
அஞ்சலி இரவிசங்கர்
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.