அன்பான அனைத்து உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் எங்கள் இணையம் ஊடாக தீபாவளி வாழ்த்துக்கள். இன்றைய நாள் கொஞ்ச வருடங்கள பின் நோக்கி பாருங்கள்.
மயிலை மண்ணில் ராசத்தி அக்காவின் ரியூசனை மறந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் . அந்த உடைந்து முறிந்து போன கிடுகு வேலிக்குள்ளே ஒரு அன்னை திரேசா போலே இருந்து எங்களை உருவாக்கிய பெருமை ராசாத்தி அக்காவும் ராசு அக்காவுக்கும் தான் உண்டு. இன்று நாங்கள் எத்தனையோபேர் புலம் பெயர்நாட்டில் பட்டதாரிகளாகவும் பண்பட்டவர்களாகவும் வாழ வழிகாட்டயவர்கள். அங்கும் ராசாத்தி அக்கா என்றால் செல்லம் கொஞ்சலாம். ராசு அக்கா கொஞ்சம் கண்டிப்பு. ஆனால் வருடத்தில் ஒருமுறை வரும் பேபி அக்காவை பார்க்க காத்திருப்போம். ஆனால் அவாவுக்கு எல்லோரும் பயம். ராசாத்தி அக்கா கிறிஸ்தவராக இருந்த போதும் ஒவ்வொரு வருடமும் எங்கள் சரஸ்வதி பூசையை திருவிழா போல மிகவும் சிறப்பாக கொண்டாடுவோம். எங்கள் ஊரில் பிறந்தவர்கள் அனேகமானோர் ஏடு துவக்கப்பட்டது அங்குதான். அதனால் மயிலைமண்ணில் ராசத்தி அக்காவின் ரியூசனை மறந்தவர்கன யாரும் இல்லை.
|
அஞ்சலி வசீகரன்மயிலிட்டி பதிவுகள்
January 2023
முழுப்பதிவுகள் |