அன்பான அனைத்து உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் எங்கள் இணையம் ஊடாக தீபாவளி வாழ்த்துக்கள். இன்றைய நாள் கொஞ்ச வருடங்கள பின் நோக்கி பாருங்கள்.
புது உடுப்பை தைத்து வாங்க தேவி அக்கா வீட்டிலும், பற்றிமாக்கா வீட்டிலும், என் வீட்டிலும் சில மக்கள், ஆட்டை பங்கு போட்டு அடிக்க சில உறவுகள், புது உடுப்பை போட்டு முதல் பூசைக்கு கோயிலுக்கு போய் தீபாவளியை ஆரம்பிக்க பல உறவுகள்,
மதங்களின் பிரிவு இல்லாமல் வாழ்ந்த ஊரில் நாங்கள் பலகாரங்களை கொண்டு சென்று உறவினருக்கு அளித்து எங்களுக்கு உரிய கைவிசேஷம் வாங்கி 2, 3 தடவை ஐஸ்பழகடைக்கும் மற்ற கடைகளுக்கும். 12 மணியாகும்போது கம கம என ஊரெல்லாம் வாசனை வரும் அந்த இறைச்சி கறுயின் அருமை, எந்த வீட்டுக்குப் போகிறோமோ எல்லாவீட்டிலும் வாங்கோ சாப்பிடலாம் என்ற அன்பான அழைப்பு மட்டும் தான். என்ன உறவுகளின் மகிமை.
சாப்பிட்ட பின்பு பெரியவர்கள் எல்லாம் குட்டி தூக்கம். ஆனால் இளைஞர்கள் எல்லாம் பந்து அடிக்கும் மைதானத்தில் . அங்கங்கே போஸ்ற் மின்னோளியில் உதைபந்தாட்டம். இரவானால் கூடுதலான மக்கள் படம் பார்க்க காங்கேசன்துறை "யாழ்" தியேட்டரும் "ராசநாயகி" தியேட்டருக்கும். ஒவ்வொரு வருடமும் என்னால மறக்கமுடியாது எனக்கு கைவிசேஷம் தந்தவர்கள். மத்தியாஸ் அப்பையாவின் சிறில்மாமா, தேவி மாமி, தபால்பெட்டி ஐயாம்மா, லூர்த்துமாமி வீடு, மற்றும் என் அன்பான கந்தசாமி மாமா கணக்கு பார்க்மாட்டார். சில்லறை காசும் தரமாட்டார் எப்பவும் தாள் காசும் ஐஸ்கிறீமும். என்ட அம்ம்ம்மா அப்பையா எதை கேட்டாலும் தருவார்கள். இப்படி இன்றைய தருணத்தை நினைத்து பாருங்கள். நண்பர்களுக்கும் உறவினருக்கும் நீங்கள் அனுப்பிய வாழ்த்துமடலும் அதில் எழுதிய "ஆழ்கடல் வற்றினாலும் என் அன்புக்கடல் வற்றாது" என்ற வசனமும் யாராலும் மறக்க முடியாது. இதை எழுதாத பேனா இல்லை என்றால் அது பொய் . மீண்டும் தீபாவளி வாழ்த்துக்கள்
அன்புடன்
தீபாவளி வாழ்த்துக்களுடன்
அஞ்சலி இரவிசங்கர்

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.