புது வருடம் நினைவில் வருவது எங்கள் மாதா கோயில் இரவு 12 மணி பூசை யும் ஊர்வலமாக செல்லும் மக்களும்.
முதல்நாள் cakeம் பலகாரமும் செய்பவர்கள். காலையில் பூசை முடிந்ததும் எல்லா ஆண்களும் cykel ஊர்வலம் இறைச்சிக்கடைக்கு. எங்கள் வீட்டின் பக்கத்து தெருவில். இதில் எங்களுக்கு சந்தோசம் கண்டிப்பாக பலகாரமும் cakeம் வரும். லூர்த்துமாமி வீட்டில் இருந்து பற்றிமா அக்காவும் ராசாத்தி அக்காவும், செல்வராணி அக்கா எங்கட ஐயையாவுக்கு குடுப்பதும் எங்களுக்கு வரும். தபால்பெட்டி ஐயாம்மா சாப்பிடவும் கூப்பிடுவா. எனக்கு நினைவில் இருப்பது எங்கட ஐயா புதுவருட இரவில் தபால்பெட்டி ஐயாம்மா வீட்டை சாப்பிட போவது. ஆனால் நான் கேள்விபட்டிருக்கிறேன் வேதநாயகம் மாமா இருந்த காலத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள். மற்றும் யேசுராசா மாமா மலர் அன்ரி அவர்கள் எந்த சாப்பாடு செய்தாலும் எங்களுக்கும்தான். சில வருடங்கள் எங்களோடு சேர்ந்தே பயணித்தவர்கள். அவர்களின் 4 பிள்ளைகளும். மலர் அன்ரி இந்த நாளில நான் உங்களை கண்டிப்பாக நினைத்து ஏங்குகிறேன். பிரச்சனையான காலகட்டத்தில் நான் வீட்டில் தனியாக பல நாள் இருந்தபோது எனக்காக எல்லாநாளும் சாப்பாடு தந்து உதவிகளும் செய்து பார்த்தது மறக்கவில்லை. அத்தோடு யேசுநாயகம் மனைவியும் ஞானா .மகம் .நானும் சேர்ந்து சமையல் எதையும் மறக்கவில்லை . இன்று எல்லோரும் புதுவருடத்தை சிறப்பாக கொண்டாடினாலும் எனது நினைவு மட்டும் மயிலை மண்ணை சுற்றியே வருகிறது.
அஞ்சலி இரவிசங்கர்
அஞ்சலி இரவிசங்கர்
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.