மரண அறிவித்தல்
திரு. வைரவி - முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் (vms)
(திருப்பூர் ஒன்றியம் பேச்சிஅம்மன் கோயில் காப்பாளர் சுப்பண்ணை, மற்றும் மயிலிட்டி மருதடி சித்திவிநாயகர் கோயில் மணியண்ணை)
மயிலை மடியில் : 16/08/1938
மண்ணின் மடியில் : 30/04/2021
யாழ். மயிலிட்டி பெரியநாட்டுத் தேவன்துறை திருப்பூர் ஒன்றியம் சங்கரியார் வளவு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 30-04-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
புவனேஸ்வரிஅம்மா(குட்டி) அவர்களின் அன்புக் கணவரும்,
பெரியதம்பி, தியாகு(சின்னத்தம்பி), யோகி, ரவி, காலஞ்சென்ற செல்வன். சிறிகாந்தராஜா, வரதா, வரதன், கிருபானந்தன்(கிருபா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தங்கா, பத்மராணி(ஆனந்தி), மனோவிஜயா(விசியா), சாந்தி, விக்னேஸ்வரன், சுகந்தி, கமலினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அஜந்தன், அனுசன், சங்கவி, ஆரணி, யதுகுலன், காலஞ்சென்ற செல்வி யதுசா, வசந், துவாரகா, யதுசன், திருமதி யதுசன் குகா, தனுசன், சாரா, தனுசா, கரினி, சுபாஸ், யனனி, கதிர், கிருஷா, கர்சன், கரிஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராசா, ஆனந்தம் மற்றும் திரவியம் காலஞ்சென்ற கனகசபை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அருச்சுணராசா, விமலேஸ்வரி, பரமேஸ்வரி மற்றும் ஆசைமயில், ராஜேஸ்வரி, கனகேஸ்வரி, நாகேஸ்வரி, கமேலேஸ்வரி, சிவராசா, கனி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: வை.மு.சு.குடும்பத்தினர்.

நேரடி ஒளிபரப்பு:
https://youtu.be/tsyxoNYQ5Wc
2nd May 2021 @ காலை 08:00 (Sri Lanka),
03:30 (United Kingdom),
04:30 (Europe CET),
22:30 - 01/05/2021 (Canada, Ontario),
12:30 (Australia, Sydney).
கிரியை:
ஞாயிற்றுக்கிழமை, 02/05/2021,
நேரம்: காலை 8 மணிக்கு (இலங்கை) ஆரம்பமாகும்.
கே.கே.எஸ். வீதீ, சுன்னாகம்.
தகனம்:
ஞாயிற்றுக்கிழமை, 02/05/2021,
நேரம்: காலை 12 மணி (இலங்கை).
மயிலிட்டி இந்து மயானம்.
தொடர்புகளுக்கு:
பிள்ளைகள் (Viber & WhatsApp)
0094777570224
0094777043662
00919962044942
0041765261201

இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
துயர் பகிர்வு!
எமது குலத்தாயவளின் ஆலய பரிபாலன சபையின் காப்பாளர்களில் ஒருவராகவும், வயதில் மூத்தவராகவும் இருந்து ஓடோடி வந்து சகல விடயங்களிலும் ஒன்றித்து செயலாற்றிய சுப்பர் ஐயா (வைரவி-முருகுப்பிள்ளை-சுப்பிரமணியம் - VMS) மறைந்த செய்தி மாறா துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலய பரிபாலன சபை நிர்வாக கூட்டமாகிலும், பொதுக் கூட்டமாகிலும், ஆலய கட்டுமானப்பணியாகிலும் முதல் ஆளாக ஆர்வத்துடன் வந்து நிற்கும் சுப்பர் ஐயாவின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது.
முதுமை தந்த இயலாமையை தனது ஈடுபாட்டுடன் கூடிய பங்களிப்பின் மூலம் இயலாததாக்கியிருந்தார் என்றால் மிகையாகாது.
ஆலயம் கட்டுமானம் நிறைவுகட்டத்தை அடைந்து குடமுழுக்கு பெருவிழாவிற்கு காத்திருக்கும் நேரத்தில் அவசரப்பட்டது எனோ....?
மீள்குடியேற்றத்தின் பின்னர் எமது ஆலயத்தின் ஆரம்ப பணியில் தொடங்கி தற்போதைய பணிகள் வரை தனது கரங்களாலும், கால்களாலும் தடம் பதித்த ஒருவர் என்ற வகையில் சுப்பர் ஐயாவின் ஆத்மா நிறைவுடன் பேச்சி தாயவளின் திருவடி நிழலில் அமைதி கொள்ளும் என திடமாக நம்புகின்றோம்.
மூத்தவராக உடனிருந்து பெறுமதியான ஆலோசனைகளை வழங்கி பக்கபலமாக இருந்த சுப்பர் ஐயாவின் இழப்பு வேறு எவராலும் இட்டு நிரப்ப முடியாத பேரிழப்பாகும்.
அமரர் வைரவி-முருகுப்பிள்ளை-சுப்பிரமணியம் ஐயாவின் ஆத்மா ஆதி சிவன் திருவடி நிழலில் அமைதி கொள்ள எல்லாம் வல்ல பேச்சி தாயவளின் திருவருளை வேண்டி நிற்கின்றோம்.
அத்துடன் ஐயாவின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார்-உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திருப்பூர் ஒன்றிய உறவுகள், மயிலிட்டி வாழ் உறவுகள் அனைவருக்கும் ஆழ்நத இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஆலய பரிபாலன சபை
அருள்மிக பேச்சி அம்மன் என வழங்கும் முத்துமாரி அம்மன் ஆலயம்
திருப்பூர் ஒன்றியம்
மயிலிட்டி
30.04.2021
இரா. மயூதரன்
அமரர் முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் ( சுப்பர் ) என செல்லமாக அழைப்பார்கள். எம் மயிலை மண் பெற்றெடுத்த மரியாதைக்குரிய பெரியவர்களில் நீங்களும் ஒருவர். எங்கள் கோவில்களின் முக்கிய பொறுப்புக்களை மக்களாகவே இவரை நியமித்தார்கள். அரசடிப் பிள்ளையார் கோவிலின் பொறுப்பாளராகவும் மீழவும் கட்டப்பட்டுக்கொன்டிருக்கும் முத்துமாரியம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் காப்பாளர்களில் ஒருவராகவும் வயதில் மூத்தவர் என்ற வகையில் பல வழிகளிலும் ஆலோசனை கூறி நடக்கமுடியாத வேளெயிலும்
கோவில் சம்மந்தமான சகல விடையங்களிலும் பங்கேற்று செயலாற்றியவர் ஐயா இன்று ஒவ்வொரு பெரியவர்களாக அடுத்தடுத்து எங்களை விட்டு கானகம் செல்வதேனோ. தொடர்ந்து நாம் எம் ஊர் பாதுகாவலரை இழந்துகொன்டிருக்கிறோம் எம் இளைய்யோரை முன்னின்று வழிநடத்திச் செல்வீர்களென்றிருந்தோம் இப்படி ஒவ்வொருவராக ஆண்டவன் தன் அனைப்பில் எடுத்துக் கொள்கிறார்.
நீங்கள் மறைந்த செய்திகேட்டு ஆறாத்துயரில் இருக்குன்றோம் ஐயா. உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பேச்சியம்மன் என வழங்கும் முத்துமாரியம்மனை வேண்டுகிறோம் ஐயா.
திருப்பூர் ஒன்றுயம் மயிலிட்டி.
சுவீட்சர்லாந்துக்கிளை??
30/04/2021