அனைத்து அப்பாக்களிற்கும், தந்தையர் தின வாழ்த்துக்கள்.
சரி 365 நாள் இருக்கு ஒருமாதிரி நமக்கும் ஒரு நாளை ஒதுக்கி மரியாதையும், கெளரவம் கொடுக்கிறார்கள். சரி இங்க கேள்வி என்னவென்றால், எத்தனை அப்பாக்கள் தங்கள் வாழ்க்கையில் தாங்களும் திருப்தியடைந்து, தங்களது குடும்பத்தையும் இயன்றளவு திருப்திப்படுத்தி, ஓரளவேனும் ஒரு நிறைவான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் என்பதுதான்

நான் வாழ்க்கையில் வெற்றியடைதுவிட்டேன் என சிலர் கூறுகின்றனர்.அது முற்றிலும் ஏற்புடையதல்ல.... காரணம் வெற்றி தோல்வி என்பது குடும்ப வாழ்க்கையை பொறுத்தமட்டில் பணத்தால், பதவி, புகழால் வருவதில்லை. மனநின்மதி ஒன்றுதான் ஒரு மனிதனை குடும்பவாழ்க்கையில் பூரணப்படுத்துகின்றது..... அதுக்காக நான் சொல்லவரல்ல மேற்சொன்ன விடயங்கள் அனாவசியமானது என்று.
எத்தனையோ அப்பாக்கள் இன்னும் சர்வாதிகாரிகளாகவே இருக்கிறார்கள். இன்றைய நாளில் யாரையும் புண்படுத்தும் நோக்கம் சிறிதளவும் எனக்கில்லை. காரணம் நானும் உங்களில் ஒருவர்தான். நான் சொல்லவந்த விடயம், பிள்ளைகள் சுதந்திரம். அனைத்து விடயங்களையும் தாமாகவே தீர்மானித்து முடிவையும் தாம் எடுத்துவிட்டு, அதையே தங்களது பிள்ளைகளது தலைமேல் கட்டிவிட்டு அப்புறம் பெருமையடித்து கொ(ல்)ள்வார்கள், இதுவரை எந்த பிள்ளைகளும் சொல்லவில்லை தந்தையைபார்த்து ஏன் எங்களை இப்படி வளர்த்தீர்கள் என்று. ஆனால் எத்தனை வீடுகளில் பிள்ளைகளுக்கு பெருமையடித்துக் கொள்ளுவதும், தங்களை ஒரு சாகச வீரனாக காட்டுவதுமே முக்கியவிடயமாக கொண்டிருக்கிறார்கள்.
இதனால் பிள்ளைகள் மத்தியில் தந்தைமீதான ஒருவித வெறுப்புணர்வுதான் ஏற்படுகின்றது. பிள்ளைகளில். நம்பிக்கையில்லாத்தன்மை மிகவும் முக்கியமான ஒருகாரணம்,அதிலும் பெண்பிள்ளை என்றால் கூடுதல் கவனம் எடுக்கின்றனர் பேர்வழி என்று வீண்கட்டுப்பாடுகள், வீண்சந்தேகங்கள் கொள்வது இவையெல்லாம் தந்தை,பிள்ளை உறவில் மிக மோசமான விரிசலை ஏற்படுத்தும்.
ஒன்றைமட்டும் மறக்கக்கூடாது நீங்களும் அவர்கள் வயதை கடந்து வந்தவர்கள்தான்.உங்கள் பிள்ளைகள் நாளை காலம் போற்றும் உன்னதமான இடத்திற்கு போகலாம்,அதற்கு நீங்கள் ஏன் உறுதுணையாக இருக்க கூடாது. *************
எல்லா அப்பாக்களும் உண்மையில் நாம் கண்ணால் காணும் தெய்வங்கள்தான். இது எனது பொதுவாக கருத்து, ஆனாலும் அவரவர் அணுகுமுறைகளை பொறுத்துத்தான் வேறுபடுகின்றார்கள். உண்மையில் ஒரு தந்தையின் கடமை, தாயின் கடமை என்பதை அடிப்படையாக வைத்தே இல்வாழ்க்கை சிறப்புறுகின்றது. இத்தகைய உயற்கரிய பொறுப்பை சுமந்து உங்கள் பிள்ளைகளின் கதாநாயகனாக விளங்கும், இன்றல்ல என்றும் பிள்ளைகள் பெருமைகொள்ளும் வகையில் உங்களை நீங்களே சரிப்படுதுவீர்களானால், நாளைதரும் நம்பிக்கையில் காலத்தை வென்றெடுக்கும் உங்கள் பிள்ளைகளுடன் கைகோர்த்தபடி நீங்களும்############
***மதீஸ்*** (உங்களில் ஒருவன்)