
பார்போற்ற வாழ்ந்திடல்
எனும் கூற்று உயிர்ப்பிக்க
ஊர்போற்ற வாழ்ந்திட்ட
உத்தமராசா நீங்கள்.....
ஊரெல்லாம் ஓலமிட
உறவுகள் கலங்கிநிற்க
உடலைமட்டும் இங்குவிட்டு
உயிர்கொண்டு சென்றதெங்கே.........
![]() பார்போற்ற வாழ்ந்திடல் எனும் கூற்று உயிர்ப்பிக்க ஊர்போற்ற வாழ்ந்திட்ட உத்தமராசா நீங்கள்..... ஊரெல்லாம் ஓலமிட உறவுகள் கலங்கிநிற்க உடலைமட்டும் இங்குவிட்டு உயிர்கொண்டு சென்றதெங்கே.........
0 Comments
![]()
நட்பறிய, நலம் விசாரிக்க,
அல்லது எங்கிருக்கிறீர்கள் என தெரியாமல் கூட தூர தேசம்மொன்றில் சுகமாக வாழ்ந்தபடி... நீங்களும்தான் இருந்திருப்பீர்கள்... கொஞ்சிக்குலாவ குழந்தைகளும் இருந்திருக்கும், மக்கள் மனங்களில் வைத்தியர்களாக, தாதியர்களாக, ஆசிரியர்களாக, பொறுப்பான குடும்ப பெற்றோர்களாக, சமூகத்தை தாங்கிநிற்கும் ஏதோவொரு சிறுதுரும்பாகவேனும், நீங்களும்தான் இருந்திருப்பீர்கள்... ![]()
வணக்கம் உறவுகளே..... முதல் முறையாக பிரான்சில் திருக்குறள் (1330) மூலமும் உரையும் இசையோடு பாடலாக 168 கலைஞர்களின் குரலில் திரு. ஸ்ரார் சிறி அவர்களினால் இசையமைத்து, தயாரித்து ஒலிப்பேழை வடிவில் உருவாக்கப்பட்டு, கடந்த 24/05/2015 அன்று வெளியீடு செய்யப்பட்டது. அதில் நமது மதீஸ் அவர்களுக்கும் பாடல்களை பாடுவதற்கு இறையருள் கிடத்ததினால், அவ் ஒலிப்பேழையில் குறள்கள் மூலம் தனது குரலையும் பதிவேற்றி எமக்கும், எமது ஊருக்கும் பெருமை சேர்த்திருக்கின்றார். வெளியீட்டு நிகழ்வில் பாடகர்களைக் கௌரவிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட சில படங்கள்!
![]() "மனசெல்லாம் உன் வசம்" அண்மையில் வெளியான ஈழத்துக் கலைஞர்களின் குறும்படம். புலத்தில் இதுபோன்ற காதல் கதைகள் ஆங்காங்கே அரங்கேறிய வண்ணமேதான் உள்ளது. இந்தப் படைப்பில் அண்ணனாக நடித்துள்ளார் மற்றும் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். உங்கள் பார்வைக்கு நம்மவர்களின் படைப்பு இணைத்துள்ளோம். நன்றி: கலைச்சுடர்! ![]() ................பொதுவாக சமநிலை என்றவுடன் உங்கள் எண்ணக்கருவுக்குள், ஏதோ கணக்கு சம்மந்தமான கோட்பாடு சொல்லப்போகின்றேன் என்று எண்ணத்தோண்றினால் அது தவறு, சமநிலை என்று சொல்லும்போதே சமச்சீர், நடுநிலை, நேர்கோடு என்று பல பொருள்படும். ஏன் சமநிலை வர்த்தகம், சமுதாயம், கலை, சிற்பம், ஓவியம், விளையாட்டு, சிந்தனை என்று இதன் பரிணாமம் விரிவடைந்தே செல்கின்றது, ஆனால் நான் சொல்லவந்த விடயமும், என் சிந்தனையில் உருவான கேள்வியும் குடும்ப வாழ்க்கையில் சமநிலை எவ்வாறு தனது ஆதிக்கத்தை செலுத்துகின்றது என்பதுதான்....... ![]() பிரான்ஸ் நாட்டிலுள்ள ஈழத்துத் திரைத்துறைப் படைப்பாளில் எமது மயிலை மகனும் சாதனை படைத்து வருகின்றார். இவர் இங்கு வெளிவந்துள்ள மற்றும் வரவிருக்கின்ற பல குறும்படங்களில் நடித்தும், திரைக்குப் பின்னால் தொழில்நுட்ப வேலைகளிலும் தன்னை ஐக்கியப்படுத்தி தனக்கும் தன் மண்ணுக்கும் பெருமை தேடித்தந்து கொண்டிருக்கின்றார். ![]() அனைத்து அப்பாக்களிற்கும், தந்தையர் தின வாழ்த்துக்கள். சரி 365 நாள் இருக்கு ஒருமாதிரி நமக்கும் ஒரு நாளை ஒதுக்கி மரியாதையும், கெளரவம் கொடுக்கிறார்கள். சரி இங்க கேள்வி என்னவென்றால், எத்தனை அப்பாக்கள் தங்கள் வாழ்க்கையில் தாங்களும் திருப்தியடைந்து, தங்களது குடும்பத்தையும் இயன்றளவு திருப்திப்படுத்தி, ஓரளவேனும் ஒரு நிறைவான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் என்பதுதான் |
மகிபாலன் மதீஸ்
|