................பொதுவாக சமநிலை என்றவுடன் உங்கள் எண்ணக்கருவுக்குள், ஏதோ கணக்கு சம்மந்தமான கோட்பாடு சொல்லப்போகின்றேன் என்று எண்ணத்தோண்றினால் அது தவறு, சமநிலை என்று சொல்லும்போதே சமச்சீர், நடுநிலை, நேர்கோடு என்று பல பொருள்படும். ஏன் சமநிலை வர்த்தகம், சமுதாயம், கலை, சிற்பம், ஓவியம், விளையாட்டு, சிந்தனை என்று இதன் பரிணாமம் விரிவடைந்தே செல்கின்றது, ஆனால் நான் சொல்லவந்த விடயமும், என் சிந்தனையில் உருவான கேள்வியும் குடும்ப வாழ்க்கையில் சமநிலை எவ்வாறு தனது ஆதிக்கத்தை செலுத்துகின்றது என்பதுதான்.......
இன்று நமது சமூகத்தை பொறுத்தவரையில் புலம்பெயர் நாடுகளில் கணக்கிட முடியாத பிரித்தல்கள், காள்ப்புணர்வுகள், ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் உறவுமுறைகளுக்குள் ஏன் ஏற்படுகின்றது, காரணம் சரியான சமநிலைப் பார்வையின்மை.
இதை விளக்கமாக சொல்வதாயின் புரிதலின் அடிப்படைத் தன்மையின்மை என்று சொல்லலாம். இந்த புரிதல் இருந்தாலே வாழ்க்கையின் பாதிப் பிரச்சினையில் இருந்து நாம் விடுபடலாம். அப்ப மீதியிலிருந்து என்ன பண்ணுறதுன்னு நீங்கள் கேட்கிறது லேசா காதில் விழுகிறது.
அதுதாங்க மீதி இருக்கிற பிரச்சினை காலத்துக்கும் ,உங்களுக்குமானது. அதை நீங்கள்தான் முகம்கொள்ளல் வேண்டும். காலத்துடன் தனித்து போராடுவது வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு மட்டுமில்லாமல், நம்மையே நாம உணரவும் முடியும். காலம் நமக்காக நிறைய பாடங்களை கற்பித்திருக்கின்றது. ஆனால் நாம் எதையுமே வாழ்க்கையோடு சற்று அருகில் வைத்து பார்ப்பதில்லை. தூக்கி தூரப்போட்டுவிட்டு அடுத்த கட்டத்துக்கு சென்றுவிடுகின்றோம்.
வேகப்பயணம் மிகவும் நல்லது, ஆனால் விவேகமற்ற வேகப்பயணம் ரொம்பவும் ஆபத்தானது. சமநிலை கோட்பாட்டை காலம் மனிதனுக்கு எவ்வாறு உணர்த்துகின்றது என்றால், பெரிய உலகளாவிய இயற்கை அழிவுகள், போர், பாரிய விபத்துக்கள்....... இவைகள் யாவும் யாரும் எதிர்பார்திருகவே முடியாது. வாழும் காலத்தில் நான் மேற்சொன்ன விடயங்களில் மனைவியுடன் தொடங்கி அனத்து உறவுகளுடனும் நமது வீண் காழ்ப்புணர்வை வளர்த்துக்கொண்டு பொய்யான வாழ்க்கையோடும், நம்மையே நாம் ஏமாற்றியும் வாழ்கின்றோம்.
காந்தி சொன்னதுபோல, ஊரை திருத்தலாம், சமுதாயத்தை திருத்தலாம் என்று நீ நினைத்தால், முதலில் உன்னை மாற்றிக்கொள் மாற்றம் தானாக ஏற்படும். அதுபோலத்தான் யாரும் யாரையும் கட்டுப்படுத்தவோ அன்றி அதிகாரம் செலுத்தவோ முடியாது. உங்களை சார்ந்திருப்பவர்கள்மேல் காட்டும் அன்பும், உங்கள் எண்ணங்களைப்போல அவர்கள் எண்ணங்களுக்கும் உங்களால் வண்ணம் தீட்ட முடிந்தால் உங்கள் வாழ்க்கையை சுற்றி ஒரு ஒளிவட்டம் எப்போதும் இருக்கும்.
இறுமாப்புடன் தலைநிமிர்ந்து, நெஞ்சை நிமிர்த்தி வெட்டியாக நடக்காமல் கொஞ்சம் தலைகுனிந்து கீழே பார்த்தால் உங்களுக்கான சந்தோசங்கள் உங்கள் காலடியிலேயே கொட்டிக்கிடக்கின்றதை காண்பீர்கள். இல்வாழ்க்கைச் சமநிலை இருவரில் இருந்து தொடங்கி, ஒரு உலகளாவிய சமநிலையை ஏற்படுத்தும்..... இது நியதி..... எப்ப என்றெல்லாம் கேட்டு சும்மா என்ன குழப்பக்கூடாது. (மாங்கொட்டை வைக்கும்போதெல்லாம் கட்டாயம் மரம் வளரும் என்றில்லை, இருந்தாலும் வைக்கிறோம். சில வேளை மரம் வளர்ந்தால்...... அம்மா சின்னனில சொன்னது) எல்லாம் ஒரு நம்பிக்கைதான் boss. என் சிற்றறிவுக்கெட்டிய விடயங்களை உங்களுடன் ஏதோ ஒரு நம்பிக்கையில் பகிர்ந்துள்ளேன். தவறுகள் இருப்பின் புத்திஜீவிகள் பொறுதுக்கொள்வதுடன், அதனை சுட்டிக்காட்டும்படியும் கேட்டுக்கொள்கிறேன்.
பிரியமுடன்
***உங்களில் ஒருவன்***
.....(மதீஸ் )....................