
1980ம் ஆண்டு மயிலிட்டி முனையன் வளவு முருகையன் ஆலயத்தின் சித்திரத்தேர் வெள்ளோட்டத் தினத்தன்று வெளியிடப்பட்ட சிறப்பு மலர். மயிலிட்டி மக்கள் பெருமைகொள்ளும் பலவற்றில் இச் சித்திரத்தேரும் முதன்மை பெறுகின்றது. "கனகசபை சிற்பாலயம்" எங்கள் மயிலிட்டியின் சிற்பக்கலைஞர்களின் கூடாரம். பிரதம ஸ்தபதி திரு. சி.நவரத்தினம் அவர்களின் தலைமையிலான குழு முழுவீச்சுடன் மேற்கொண்டு எங்களாலும் முடியும் என்று நிறை செய்து சாதித்துக் காட்டினார்கள்.இந்தியகச் சிற்பக் கலைஞர்கள் உதவி ஏதுமின்றி உருவாக்கி மயிலிட்டிக்குப் பெருமை சேர்த்தார்கள் என்று சொல்வதைவிட இச்சிறப்பான சிற்பிகளைத் தன்னகத்தே கொண்டதால் மயிலிட்டி தலை நிமிர்த்தி பெருமை கொண்டது என்றுதான் சொல்லவேண்டும்.