அந்த மணல் கடற்கரை பல சிறுவர்களின் மறக்கமுடியாத சில ஆரம்பங்கள். தனியாக ஒன்றும் ஆரம்பமாகவில்லை. கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்பதற்கமைந்தாற்போல் கூடினோம் ஒன்றாக, பல நிகழ்வுகள் பல மாற்றங்கள்.
விடுமுறை காலத்தில் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்த எங்களுக்கு விளையாட்டு வீடு கட்ட ஆசை வந்தது. பல வாடிகளிலிருந்து உருவப்பட்ட கம்புகளினாலும் கிடுகுகளினாலும் எங்களின் சிறிய வீடு அல்லது கொட்டில் அல்லது குடில் உருவாகியது. சுவாமிப்படங்கள் உள்ளே வந்தன, பூக்கள் வைத்து விளக்கு, ஊதுபத்தி, கற்பூரம் போன்றவற்றுடன் அழகான வீடு அமைந்தது.
கொட்டில் கட்டியாச்சு பெற்றோர் பெரியோர் தடைசொல்லவில்லை. எங்களைப் பார்த்து « பெடியள் பரவாயில்லை » என்றவர்களும், « நடக்கட்டும் நடக்கட்டும் » என்றவர்களும், « டேய் என்னடா செய்யிறீங்கள் » என்று அதட்டியவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அடுத்தகட்டம் சமையலுக்கு நகர்ந்தது.
அவரவர் வீடுகளில்போய் நாங்கள் பெடியங்கள் கொட்டிலில் சமைக்கப்போகிறோம் என்றால் « ஓமோம் நல்ல முயற்சி, என்ன உதவி வேணுமெண்டாலும் கேளுங்கோ எல்லாம் தாறம் » என்று சொல்வார்கள் என்று நாம் நினைக்கவில்லை. ஒவ்வொருவரும் வீடுகளிலிருந்து ஒவ்வொரு பொருள் கொண்டுவரவேண்டுமென்று முடிவாயிற்று (களவு அல்ல பொருள் சேர்த்தல் என்று வைத்துக் கொள்வோம்). சமையல் சோறு கறி என்று முடிவெடுக்கவில்லை. சுகமான சமையல் எங்களின் முதல் அடுப்படி முயற்சி «ஏரல் புளியாணம்». உப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், புளி, பெரிய சட்டி, அகப்பை, கோப்பைகள் என தேவயான அனைத்தும் ஒவ்வொருவரினதும் வீடுகளிலிருந்து வந்தது. பெற்றோருக்குத் தெரியாமல்.
« ஏரல் » கடற்கரையில் கால்களாலோ அல்லது கைகளாலோ ஈரமண்ணில் தோண்டி எடுத்துக்கொள்ளலாம். அப்படியே நாங்களும் எங்களுக்குத் தேவயான அளவுக்கு எடுத்துக் கடலிலேயே கழுவிக்கொண்டு வந்து எங்கள் குறூப்பின் தலைவர், பூசகர், சமையல்காரர் என எல்லாமுமாகிய உதயத்திடம் கொடுப்போம். சிலர் புளியைக் கரைக்க, மற்றும் சிலர் வெங்காயம், மிளகாய் வெட்ட, மற்றவர்கள் அடுப்புக்குத் தேவயான மூன்று கல்லிலிருந்து ஓலை, விறகு வரை எல்லாம் தயார் பண்ணிக்குடுக்க, உதயத்தின் கைவண்ணத்தில் ஏரல் புளியாணம் இனிதே உருவாகும். (செய்முறை சொல்லமாட்டோம் அது பரமரகசியம்).
பின்பு எல்லோரும் சட்டியைச்சுற்றி ஒன்றாயிருந்து கோப்பைகள், சிரட்டைகள் என்பனவற்றில் விட்டு ஏரலைச் சாப்பிட்டு, புளியாணத்தைக் குடிப்போம். என்ன ஒரு சுவை. இப்போது நினைத்தாலும் நாக்கில் நீர் ஊறுகிறது. அந்தத்தூள், இந்தத்தூள் என ஒன்றுமில்லை, வாசனைக்கென்று ஒன்றும் சேர்ப்பதுமில்லை. சேர்த்துக்கொண்டது புளி, உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் மட்டுமே. எந்த ஒரு சாப்பாட்டுக் கடையிலும் கிடைக்காது.
அந்த நேரத்தில் நினைத்திருப்போமா எங்களுக்குச் சமைத்துத் தந்த உதயம் பிரான்ஸ் நாட்டில் மெக்சிக்கன் உணவுவிடுதியில் குசினியராக வேலை செய்வானென்று !
(அந்த மணல் கடற்கரை பல சிறுவர்களின் மறக்கமுடியாத சில ஆரம்பங்கள். தனியாக ஒன்றும் ஆரம்பமாகவில்லை. கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்பதற்கமைந்தாற்போல், கூடினோம் ஒன்றாக பல நிகழ்வுகள் பல மாற்றங்கள்.)
இன்னொரு நினைவுகளில் சந்திப்போம், !