தற்போது வெறும் நிலமாக இருக்கும் நமது மயிலிட்டி 1984 இல் அழகாகவும், ஆனந்தமாகவும், குறையேதுமில்லாமல் தன்னிறைவு பெற்ற ஊராக எப்படி இருந்திருக்கின்றது என்பதை இங்கே உள்ள சில புகைப்படங்கள் மூலம் பாருங்கள்.
திரு. அ.குணபாலசிங்கம் அவர்களின் தேடலில், அமரர் சி.குமாரசாமி (மயிலிட்டி பேக்கரி) அவர்களின் வீட்டில் 1984ம் ஆண்டு நடைபெற்ற ஒரு திருமண நிகழ்வின் வீடியோவிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள்தான் இவைகள். திருமண வீட்டிலிருந்து மயிலிட்டிச் சந்தி முருகன் கோவில்வரை உள்ள இடங்கள் பதிவாக்கப்பட்டு, மயிலிட்டி எப்படி இருந்துள்ளது என்பதற்கான ஒரு சிறந்த ஆதாரமாகவும் அமைந்துள்ளது. அரிய இப் படங்களை எடுப்பதற்கு மனமுவந்து தந்து உதவிய அமரர் சி.குமாரசாமி அவர்களின் குடும்பத்தினருக்கும், திரு.அ.குணபாலசிங்கம் அவர்களுக்கும் மயிலிட்டி மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.